இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதி : இந்தோனேஷியா..!!

Read Time:1 Minute, 37 Second

Chinese_port_dealஇலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதியை இந்தோனேஷியா வழங்கியுள்ளது. பயண விசா விலக்கு தொடர்பான ஜனாதிபதி விதிமுறைகளில் மேலும் 79 நாடுகளை இந்தோனோஷியா கடந்த மாதம் ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது.

குறித்த நாடுகளின் கடவுச் சீட்டை வைத்துள்ளவர்கள் வீசா இல்லாமல் தமது நாட்டிற்கு வருகை தரலாம் என இந்தோனேஷிய குடிவரவு அலுவலகம் கூறியுள்ளது. 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த வீசா விலக்கு செல்லுபடியாகும் எனவும் குடிவரவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் 169 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரஜைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லை ஊடாக இந்தோனேஷிய நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா, குடும்ப பயணம், சமூக பயணம், கலை, கலாசார அரச பணி, செயலமர்வில் உரையாற்றுதல், சர்வதேச கண்காட்சியில் பங்குபற்றுதல், இந்தோனேஷியாவிலுள்ள தலைமை அலுவலக அதிகாரிகளுடனான சந்திப்பிற்கென இந்த வீசா விலக்கை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனவாதம் பிரிவினைவாதம் இனி வேண்டாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்..!!
Next post கீழக்கரையில் பறந்து திரிந்த வெள்ளை நிற காகம்..!!