ஜுன் 6-ந் தேதி அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்..!!

Read Time:1 Minute, 48 Second

201604041535078219_Thala-new-movie-shooting-start-in-June_SECVPFஅஜித்-சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 6-ந் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘வேதாளம்’ படத்திற்கு அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவிருக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பூஜையை வருகிற மே 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் நடைபெறவிருக்கிறது.

சத்யஜோதி நிறுவனத்தில் மிக எளிமையாக நடைபெறும் இப்படத்தின் பூஜையை தொடர்ந்து ஜுன் 6-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவிருக்கின்றனர். சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ‘வேதாளம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் பெரம்பூர் பின்னி மில்லில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘வேதாளம்’ படத்திலும் பணியாற்றியவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது..!!
Next post சஞ்ஜிதா ஷெட்டி -கவர்ச்சிப் படங்கள்..!!