கரத்தில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்க அதனை வயிற்­றுக்குள் வைத்து தைத்த மருத்­து­வர்கள்..!!

Read Time:2 Minute, 32 Second

images (3)தொழிற்­சாலை விபத்­தொன்றில் கையின் ஒரு பகு­தியில் தோல் முழு­வதும் உரிக்­கப்­பட்ட நிலைக்­குள்­ளான நப­ரொ­ரு­வ­ருக்கு, அவ­ரது அந்தக் கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க அதனை அவ­ரது வயிற்றுப் பகு­திக்குள் வைத்து மருத்­து­வர்கள் தைத்த சம்­பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.
தொழிற்­சா­லை­யொன்றில் இயந்­தி­ரத்தை செயற்­ப­டுத்தும் பிரிவில் கட­மை­யாற்றி வந்த கார்லொஸ் மரி­யோற்றி (42 வயது) என்ற மேற்­படி நபர், சம்­பவ தினம் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த போது இயந்­தி­ரத்தில் அவ­ரது கரம் சிக்­கி­யதால் அந்தக் கரத்தின் முன் பகு­தி­யி­லுள்ள தோல் முழு­வதும் உரிந்து சேத­ம­டைந்­தது.

இத­னை­ய­டுத்து ஒர்லீன்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள சாந்த ஒலி­தியா மருத்­து­வ­ம­னைக்கு அவர் கொண்டு செல்­லப்­பட்டார்.

இந்­நி­லையில் அவ­ரது தோல் உரிந்த கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க, அது அவ­ரது வயிற்­றுக்குள் உட்செலுத்­தப்­பட்டு தைக்­கப்­பட்­டது.

வழ­மை­யாக இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களின் போது, தோலு­ரிந்த கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­பட்டு உடலின் ஏனைய பகு­தி­க­ளுக்கு பர­வு­வதை தடுக்க அந்தக் கரப் பகு­தியை துண்­டிக்க மருத்­து­வர்கள் சிபா­ரிசு செய்­வார்கள். ஆனால் பிரேசில் மருத்­து­வர்­களோ அந்தக் கரத்தை எவ்­வா­றா­வது பாது­காக்க வேண்டும் என்ற முயற்­சியில் மேற்­படி புரட்­சி­கர அறு­வைச்­ சி­கிச்­சையை அவ­ருக்கு மேற்­கொண்­டுள்­ளனர்.

அந்தக் கரப் பகுதி, அதன் மேற்­ப­ரப்பில் பாது­காப்புக் கவசமாக மென்மையான தோல் படலம் உருவாகும் வரை 6 வாரங்களுக்கு இவ்வாறு அவரது வயிற்றுப்பகுதியில் புதையுண்ட நிலையில் இருக்க வுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளம்பெண்..!!
Next post வெளிநாடுகளில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு..!!