ராஜஸ்தானில் ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறை – நண்பர்மீது கொலைவெறி தாக்குதல்..!!

Read Time:1 Minute, 46 Second

timthumbஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்கவந்த ஒரு இளம்வயது பெண்ணும் அவரது ஆண் நண்பரும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அஜ்மீர் நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புஷ்கார் நகருக்கு ஒரு வாடகை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

சம்பவத்தன்று மாலை உள்ளூரை சேர்ந்த சில சமூகவிரோதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த ஜோடியை வழிமறித்தனர். அந்த இளம்பெண்ணின் கைப்பையை பறித்ததுடன், அவரது ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தினர். இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பரை கொலைவெறியுடன் கல்லால் தாக்கியுள்ளனர்

அந்த கும்பலிடம் இருந்து தப்பிப் பிழைத்த அந்த ஜோடி, ரத்த காயத்துடன் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்ததை கண்ட ஓட்டல் மானேஜர் அவர்களை அஜ்மீரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தால் உண்டான திகிலில் இருந்து இன்னும் மீளாத அந்தப் பெண், போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கக்கூட இயலாத அளவில் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!
Next post கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி…!!