9 வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குடும்பஸ்தன்..!!
பாடசாலையிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 34வயது நிரம்பிய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் நான்காம் தரத்தில் கல்வி கற்று வந்த 9 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி ஆபத்தான நிலையில் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 34வயதுடைய திருமணமான நபர் எல்ல பொலிஸாரினால், நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்த போது, சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.