பிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்?

Read Time:1 Minute, 39 Second

beraseil_002பெல்ஜியத் தலைநகர் பிரசெல்ஸ்ஸில் கடந்த மாதம் நடைற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது.

பாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடுபட்ட நஜீம் தன்னை ஒரு மாணவனாக தெரிவித்திருந்தார்.

பிரசெல்ஸ்ஸில் ஸவென்டம் விமான நிலையத்தில் தன்னை வெடிக்க வைத்த நஜீம் (Najim Laachraoui) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவருக்கு ஊதியம் இல்லை: மனைவியை நாடுகடத்த பிரித்தானிய அரசு முடிவு…!!
Next post திருமணத்திற்காக விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்…!!