கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா…!!

Read Time:3 Minute, 6 Second

201604081614086021_woman-on-protest-front-of-husband-house_SECVPFகோவையில் மாமியார் வீட்டின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட இளம்பெண் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை மாவட்டம் தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவரும் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்த மனோஜ்வும்கடந்த 7 ஆண்டுகளாக காதலித்தனர்.

மனோஜ் லண்டனில் வேலைக்கு சென்றார். கிருஷ்ணவேணி பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட் வேர் நிறுவனத்தில் பணிக்கு சென்றார்.

பின்னர் கிருஷ்ணவேணி மேல்படிப்பிற்காக கனடா சென்று விட்டு கடந்த 2014–ம் ஆண்டு திரும்பிய போது இவர்களது காதலுக்கு மனோஜ் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் 2015 அக்டோபர் மாதம் 19–ந் தேதி வீட்டிற்கு தெரியாமல் சென்னையில் திருமணம் செய்தனர். வட சென்னையில் உள்ள ஒரு பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்தனர். பின்னர் இருவரும் கனடா சென்று விட்டனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு மனோஜ் சொந்த ஊர் திரும்பிய நிலையில் கிருஷ்ணவேணி தற்போது வீட்டிற்கு வந்த போது அவரை மனோஜ் மீண்டும் கனடா சென்று விடுமாறும், உன்னோடு வாழ இனி முடியாது என்று கூறினார்.ஆனால் கிருஷ்ணவேணி அதனை ஏற்றுகொள்ளாமல் நீதி மன்றம் சென்று கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தன்னை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதி மன்றம் அவருக்கு கணவர் வீட்டில் வசிக்க அனுமதி அளித்தது. இதனை அடுத்து கிருஷ்ணவேணி கனவர் மனோஜ் வீட்டிற்கு தனது பெற்றோருடன் சென்றார்.

ஆனால் மனோஜ் வீட்டில் அவர்கள் பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். இதனால் கிருஷ்ணவேணி வீட்டின் முன்பு பெற்றோர் உடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மனோஜைஎன்னுடன் சேர்ந்து வாழ நீதி மன்றமே அறிவுறுத்தியும் அவரது பெற்றோர் அதனை மதிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணவேணி கூறும்போது, நல்ல முடிவு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே…! -நோர்வே நக்கீரா (கட்டுரை)…!!
Next post பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி…!!