ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Read Time:2 Minute, 21 Second

201604081551015617_little-snake-in-the-water-pipe-in-Erode-public-shock_SECVPFஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோடை காலம் என்பதாலும் போதிய மழை இல்லை என்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் ஈரோடு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிதண்ணணீர் மிகவும் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

கருங்கல் பாளையம் மற்றும் வீரப்பன் சத்திரம் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய புழுக்கள் நெளிந்ததாகவும் பொதுமக்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் குடிதண்ணீர் குழாயில் இருந்து இன்று காலை ஒரு குட்டி பாம்பு வெளியே வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஈரோடு அசோக புரம் பகுதியில் வழக்கமாக காலை 5 மணிக்கு குடிதண்ணீர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும். இதுபோல இன்று காலையும் குடிதண்ணீர் வந்தது. அப்பகுதியில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த விசைத்தறி அதிபர் கந்தசாமி (வயது 50). என்பவர் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்.

தண்ணீர் வந்த போது முதலில் தண்ணீர் கலங்கலாக வந்தது. இதனால் அவர் அந்த தண்ணீரை வாசல் தெளிப்பதற்காக வாளியில் பிடித்தார். அப்போது குழாயில் இருந்து தண்ணீருடன் ஒரு குட்டி பாம்பு நெளிந்து வந்தது. சுமார் அறை அடி நீளம் அந்த பாம்பை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தகவல் தெரிந்த அக்கம் பக்கத்தினரும் வந்து பார்த்து தண்ணீர் குழாய் வழியாக வந்த பாம்பை அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி…!!
Next post இஸ்லாம் மதம் பற்றி தவறாக பேசிய மாணவர்: நடுரோட்டில் வெட்டி கொன்ற மர்ம கும்பல்…!!