பாய்ந்து வந்த ரயில் மீது மோதி பலியான கரடி: சுவிஸில் ஒரு சோக சம்பவம்…!!

Read Time:1 Minute, 46 Second

imagesசுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Zernez மற்றும் S-chanf என்ற பகுதிக்கு இடையில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த விலங்குகள் நலத் துறை அதிகாரிகள் உயிரிழந்த 110 எடையுள்ள அந்த கரடியை மீட்டு பேர்ன் நகர பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதே பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றி திரிவதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் மோதி கரடி விபத்துக்குள்ளாவது இது முதல் முறை அல்ல. கடந்த 2012ம் ஆண்டு ரயில் மோதி கரடி ஒன்று பலத்த காயமடைந்தது.

ஆனால், 2013ம் ஆண்டு இதே கரடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதால் அதிகாரிகள் இதனை சுட்டுக்கொன்றனர்.

இதே சுவிஸ் மாகாணத்தில் கடைசியாக கடந்த 1094ம் ஆண்டு ஒரு கரடி நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அது சுட்டுக்கொல்லப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் அருகில் உள்ள இத்தாலி நாட்டிலிருந்து சுவிஸ் நாட்டிற்குள் கரடிகள் அவ்வப்போது வந்து செல்லும்.

இதுபோன்ற ஒரு கரடி கடந்த 2005ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அந்த ஆண்டிலேயே அடையாளம் இன்றி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக எதை விரும்புகிறார்கள்…!!
Next post எலச்சிப்பாளையம் அருகே கணவன்,மனைவி தற்கொலை…!!