டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் மெக்சிகோ கொடியை ஏற்றிவைத்த தொழிலாளி: வீடியோ…!!

Read Time:4 Minute, 27 Second

201604091619503437_Canadian-worker-flies-Mexican-flag-on-Trump-building_SECVPFஅமெரிக்க அதிபர் பதவி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஓட்டலின் மொட்டைமாடியின் மீது சமீபத்தில் ஏறிய ஒரு தொழிலாளி தனது தாய்நாடான மெக்சிகோ நாட்டின் கொடியை அங்கே பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டினரையும், வந்தேறிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன் என கூறிவரும் அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் கொடும்பாவிகளை எரித்து மெக்சிகோ மக்கள் சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

குறிப்பாக, மெக்சிகோ நாட்டின் தொழில் நகரமான மான்டெர்ரி, ஏழைகள் அதிகமாக வாழும் லா மெர்செட், பியுப்லா ஆகிய பகுதிகளில் ஏசுநாதரை காட்டிக் கொடுத்த யூதாஸுக்கு பதிலாக டொனால்ட் டிரம்ப்பின் கொடும்பாவிகளை பல இடத்தில் கொளுத்திய மக்கள், தகாத வார்த்தைகளால் கொடும்பாவியை நோக்கி வசைமாறியும் பொழிந்தனர்.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான கியாகோ ரெய்னா(30) என்பவர் சமீபத்தில் தனது செயலால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட துடிக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராகவும், விழா அமைப்பாளராகவும் (இவென்ட் மேனேஜ்மென்ட்) உள்ளார். இவருக்கு சொந்தமாக அமெரிக்காவில் பல்வேறு வணிக நிறுவனங்களும், நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன.

இதுதவிர வெளிநாடுகளிலும் இவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. சில வெளிநாடுகளில் புதிதாக பல கட்டுமானப் பணிகளையும் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், கனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருக்கும் வான்கோவர் நகரில் புதிய நட்சத்திர ஓட்டலை டொனால்ட் டிரம்ப் கட்டி வருகிறார்.

69 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலுக்கு ‘டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் அன்ட் டவர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஓட்டலின் மொட்டை மாடியின் மீது சமீபத்தில் ஏறிய ஒரு தொழிலாளி தனது தாய்நாடான மெக்சிகோ நாட்டின் கொடியை அங்கே பறக்க விட்டுள்ளார். மேலும், மெக்சிகோ மக்களை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்துவரும் டிரம்ப்பை அவர் எச்சரித்தும் உள்ளார்.

’இது ஒரு அடையாள நடவடிக்கை மட்டும்தான். எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள், என் குழந்தைகள், பிறக்கப்போகும் குழந்தைகள் அனைவரையும் நீங்கள் கிரிமினல்கள் என்றும், கற்பழிப்பாளர்கள் என்றும் குற்றம்சாட்டி வருவது தவறு. அமெரிக்காவுக்குள் நாங்கள் போதைப்பொருளை கடத்தி வருவதாகவும் அதனால் குற்றங்கள் பெருகிவருவதாகவும் குறைகூறும் உங்களுக்கு நான் அளிக்கும் சிறிய பரிசுதான் இது.

எங்கள்மீது அபாண்டமான பழியைப் போடும் நீங்கள், உங்களுக்கு சொந்தமான பல கட்டிடங்களை கட்டிக் கொடுப்பது எங்கள் நாட்டு தொழிலாளர்கள் என்பதை உணர்ந்து, உங்கள் மனப்போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என அவர் கூறும் வீடியோவை காண..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளியலறையில் விபரீதம்: கொதிக்கும் வெந்நீரால் உடல் வெந்த 5 வயது சிறுவன்…!!
Next post மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு…!!