5 வாகனங்களுடன் மோதி பஸ் விபத்து…!!
அவிசாவளை நகரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மேலும் 5 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் கொழும்பு – அவிசாவளை வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, தற்போது நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டமையால் இரண்டு லொரிகள், கார் ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் வேன் ஒன்றுடனும் இவ்வாறு மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.