கணவர் வீட்டு முன் 5–வது நாளாக போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய பெண் போலீஸ் அதிகாரி…!!

Read Time:5 Minute, 14 Second

201604111332174355_woman-5th-day-struggle-husband-house-before_SECVPFகணவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை பெண் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

கோவை காரமடை குட்டையூரை சேர்ந்தவர் மனோஜ்(வயது 31). இவர் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணியை(29) காதலித்து கடந்த 2015–ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் திருமணத்துக்கு மனோஜின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. உடனே மனோஜ் பின் வாங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணவேணி கணவருடன் சேர்ந்து வாழவும், உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் காரமடை போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த காரமடை போலீசாரை கிருஷ்ணவேணி அணுகினார். ஆனால் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மனோஜ் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி, மனோஜ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கிருஷ்ணவேணி போராட்டத்தை கைவிடவில்லை.

இன்று 5–வது நாளாக மனோஜ் வீட்டு முன்பு கிருஷ்ண வேணியும், அவரது பெற்றோரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிருஷ்ண வேணியின் உறவினர் சின்ன ராஜ் என்பவருடன் மகளிர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிய பேச்சுகள் தற்போது வாட்ஸ்அப்பில் பரவுகிறது.

அதில், கிருஷ்ணவேணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ மறுக்கும் மனோஜை கண்டுபிடித்து சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறோம், நீங்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு விட்டு நாளை மகளிர் போலீஸ் நிலையம் வாருங்கள், மனோஜ் மற்றும் அவரது உறவினர்கள் செல்போன் எண் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டு பிடித்து மனோஜை பிடித்து வந்து சேர்த்து வைக்கிறேன் என உறுதி அளிக்கிறார்.

அதேநேரம் மனோஜ் வீட்டு முன்பு போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள் என கூறுகிறார். அதற்கு கிருஷ்ணவேணியின் உறவினர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது. பின்னர் கிருஷ்ணவேணியின் உறவினர் செல்போனை காரமடை சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் கொடுத்து விடுகிறார். அவரிடம் பேசிய அதிகாரி, கிருஷ்ணவேணி குறித்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.

அப்போது எனக்கு வர்ற ஆத்திரத்தில் அவள வெட்டி விட்டு ஜெயிலுக்கு போய் உட்கார்ந்து கொள்வேன். அந்த பெண்ணுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என தாறுமாறாக பேசிய உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உரையாடலின் ஒரு பகுதியாக பெண் அதிகாரி, கிருஷ்ணவேணியின் தாயாரிடம் பேசும் போது உங்கள் மகளிடம் போனை கொடுங்கள், நான் பேசுகிறேன் என்கிறார். அதற்கு கிருஷ்ணவேணி மாத்திரை போட்டு விட்டு தூங்குவதாக தாயார் கூறவே பெண் போலீஸ் அதிகாரி ஆத்திரமடைகிறார். நீங்கள் தான் அராஜகம் செய்கிறீர்கள். உங்கள் மகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் உங்கள் அனைவரையும் உள்ளே தூக்கி வைத்து விடுவேன் என மிரட்டியதும் பதிவாகி உள்ளது.

தற்போது வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வரும் இன்ஸ்பெக்டரின் பேச்சு குறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த தாய் யானையின் மடியில் பால் குடிக்க முயன்ற குட்டி யானை – நெஞ்சை நெகிழ வைத்த பாசப்போராட்டம்..!!
Next post மும்பையில் தோசை சுட்டு சாப்பிட்ட இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர்…!!