மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மி…!!

Read Time:2 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90மங்கோலியாவில் உள்ள கல்லறை ஒன்றில்மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியாவின் altai மலைப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அங்கிருந்த கல்லறை ஒன்றில் மம்மியின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதைய காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த அப்பெண், 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது, ஏனெனில் அவரது கல்லறையில் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் இவர் ஒரு சாதாரணப் பெண்மணி எனக் கூறியுள்ளனர்.

9,200 அடி உயரம் கொண்ட இந்த உடல்குறித்து ஆராய்ச்சி செய்தால், இந்த மம்மியின் தலைமுறைகள் குறித்த அறிந்துகொள்ள முடியும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மலைப்பகுதியில் உள்ள மற்றுமொரு கல்லறையில், சேணம்(குதிரைச்சவாரி புரிபவர் அமரும் இடம்), கடிவாளம், களிமண் குவளை, மர கிண்ணம், தொட்டி, முழு குதிரையின் உடல், மற்றும் பண்டைய ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மிக அரிதான கண்டுபிடிப்பாக பார்க்கப்படும் இந்த பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்லறை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,803 மீற்றர் தொலைவில் இருந்ததால் அங்கு நிலவிய குளிர் வெப்பநிலையில் காரணமாக கல்லறையில் உள்ள இந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!
Next post சாப்பிடவும் செய்வோம்! தூக்கத்தையும் விடமாட்டோம்!! நாங்கலாம் அப்பவே அந்த மாதிரி..!!