தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் வழக்கு…!!

Read Time:2 Minute, 39 Second

s7-310x165நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த EricMayoraz என்பவர் கடந்தாண்டு நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதராக தெரிவு செய்யப்பட்டு அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

ஓரினச்சேர்க்கையாளரான(Gay) இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த Carlos என்பவருடன் நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்கள் தான் என நைஜீரியா நாட்டு அதிகாரிகள் எண்ணியுள்ளனர்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் தான் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், அவர்கள் இருவருமே கணவன்-மனைவி போல் வாழ்ந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நைஜீரியா நாட்டு வெளியுறுவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான Akinremi Bolaji என்பவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சுவிஸ் தூதரக அதிகாரி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இது நைஜீரியா நாட்டிற்கு செய்த துரோகம்.

நைஜீரியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அனுமதி கிடையாது என 2014ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

தற்போது சுவிஸ் தூதரக அதிகாரி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் Akinremi Bolaji தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டத்தை நீக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்தாண்டு விடுத்த கோரிக்கையையும் நைஜீரியா அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…!!
Next post 3 ரயில்கள் மோதி உயிர் பிழைத்த அதிசய மனிதர்…!!