ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது…!!

Read Time:5 Minute, 24 Second

zika2-310x165ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது’ என்றும் அமெரிக்காவில் இந்த வைரசின் பாதிப்பானது கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொது சுகாதார மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் டாக்டர் அனே சுஷாட் பேசுகையில், ”பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பதற்கு வைரசுக்கு தொடர்பு உள்ளது.

முன்பு கணிக்கப்பட்டதைவிட ஜிகா வைரஸ் பரப்பும் கொசுக்கள் அமெரிக்காவில் அதிக மாகாணங்களில் பரவியிருக்கலாம். அமெரிக்காவில் குறைபாடுடன் குழந்தைகள் பிறந்து உள்ளதற்கு ஜிகா வைரஸ் தொடர்பு உள்ளது.

இதுவரையில் வைரஸ் தொடர்பாக நமக்கு தெரியவந்து உள்ள தகவலின்படி நினைத்ததை விட பயங்கரமானது என்பதை காட்டுகிறது,” என்று கூறிஉள்ளார்.

இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, வைரசை எதிர்க்கொள்ள உடனடி நிதியாக 1.8 பில்லியல் டாலர் நிதியை ஒதுக்க அமெரிக்க காங்கிரசிடம் கேட்டுக் கொண்டார்.

’ஜிகா’ வைரஸ் தடுப்பு விவகாரத்தில் போதுமான பணிகள் செய்யப்பட்டு உள்ளது. கொசுக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் அமெரிக்காவிற்கு அதிகமான பணத்தேவை (1.9 பில்லியன் டாலர் மதிப்பு) உள்ளது.

பீதி அடையவேண்டிய தேவையில்லை, எப்படி தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை ’ஜிகா’ வைரஸ் அழிக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

’ஜிகா’ வைரஸ் பெரியவர்களுக்கும் அரிதான நரம்பியல் பிரச்சனையும் ஏற்படுத்துகிறது என்று டாக்டர் அந்தோணி பவுசி கூறிஉள்ளார்.

டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் ‘ஜிகா’ வைரஸ் தொற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1947–ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரியவந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது.

அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவிலும் வைரஸ் பாதிப்பு உள்ளது.

பிரேசில் நாட்டில் எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும், அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் அமெரிக்கா குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பதற்கு வைரசுக்கு தொடர்பு உள்ளது என்று கூறிஉள்ளது.

கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், அதன்வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது. ‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.

உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது. தடுப்பு நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் இந்திய வாலிபர் படுகொலை…!!
Next post குழந்தையை உயிருடன் சாப்பிட்ட எறும்பு கூட்டம் தாய்க்கு 30 வருடம் சிறை…!!