By 14 April 2016 0 Comments

தந்தையின் தற்கொலையை தடுத்த 10 வயது சிறுமி…!!

1001-310x165கொல்கத்தாவில் தந்தை தற்கொலை செய்துகொள்வதை அவசரகால உதவி எண்ணுக்கு அழைத்து 10 வயது சிறுமி தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அவசர கால உதவி எண்ணான 100-க்கு அழைத்த சிறுமி, தனது தந்தை தற்கொலை முயற்சி செய்வதாகவும்,அதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறியதைக் கேட்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அந்த சிறுமியின் வீடு அமைந்துள்ள கொல்கத்தாவின் தெற்கு சிந்தி அபார்ட்மெண்ட்டுக்கு சென்ற போலீசார், அங்கு ராஷி என்ற அந்த சிறுமியின் 37 வயது தந்தை ராஜீவ் கண்ணா, தனது மனைவி, மகள் முன்னிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருந்தார்.

இதைக்கண்டு உடனடியாக தீயை அனைத்து ராஜீவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உடலில் நாற்பது சதவீத காயங்களுடன் ராஜிவ் கண்ணா, உயிர்பிழைத்தார். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூலம் அவசர உதவி எண் குறித்து அறிந்துகொண்டதாக சிறுமி ராஷி தெரிவித்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam