விக்ரம் பிறந்தநாளில் சிறப்பு பரிசு கொடுக்கும் இருமுகன் படக்குழு..!!

Read Time:2 Minute, 14 Second

201604161832440409_Irumugan-team-special-gift-to-vikram-for-birthday_SECVPFவிக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இப்படக்குழுவினர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு கொடுக்க இருக்கின்றனர்.

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் ஒன்றை நடிகர் விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

விக்ரமின் பிறந்த நாளுக்காக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த ‘இருமுகன்’ படக்குழுவினர், படத்தின் டீசரை வெளியிடலாம் என்று முடிவெடுத்து குறுகிய காலத்தில் டீசர் ஒன்றை தயார் செய்துள்ளார்கள். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில், இப்படம் எந்த மாதிரியானது என்பதையும் ரொம்ப நேர்த்தியாக விவரித்திருக்கிறார்களாம். மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இந்த டீசருக்கு ஸ்பெஷலாக பின்னணி இசையும் அமைத்துள்ளார்.

விக்ரமின் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் ‘இருமுகன்’ பர்ஸ்ட் லுக் டீசரும், அதன் வெளியீடும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்! (வீடியோ)
Next post கம்பீர் 90 ஓட்டங்கள் விளாசல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா..!!