திருமணத்தின் போது கருப்பு உடை அணிந்து வந்த மணப்பெண்: காரணம் என்ன?..!!

Read Time:2 Minute, 44 Second

2015-10-16_9-19-03-720x711அவுஸ்திரேலியாவில் மணப்பெண் ஒருவர் பாரம்பரிய வெள்ளை நிற திருமண உடை அணியாமல் கருப்பு நிறம் அணிந்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியா நாட்டவரான 25 வயது Sophia Cachia என்பவர் தான் தமது திருமணத்தின்போது கருப்பு உடை அணிந்து வந்தவர்.

பெரும்பாலான பெண்கள் தங்களது திருமணத்தின் போது வெள்ளை நிற உடை அணிந்து தங்களது துணைக்கு தேவதை போல காட்சி தருவதையே கனவாக கொண்டிருப்பார்கள்.

ஆனால் சோஃபியா தமது திருமணத்தின்போது வெள்ளை நிற உடையில் வராத போதும் தமது கணவரிடம் இருந்து காதல் ததும்பும் பார்வை கிட்டியதாக பூரிப்படைகிறார்.

கருப்பு தமக்கு மிகவும் பிடித்தமான வண்ணம் என கூறும் சோஃபியா, தமது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அந்த வண்ணத்தில் உடை அணிவதை ஒரு கனவாகவே கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கருப்பு நிறம் உன்னதமானது என தெரிவித்துள்ள அவர், இது பார்ப்பதற்கும் அருமையாக இருக்கின்றது என்றார். மேலும் கருப்பு வண்ணம் கவர்ச்சியானது, துணிவானது, தைரியத்தை வெளிக்காட்டக்கூடியது என்றார்.

துரதிர்ஷ்டத்தின் குறியீடாக கருப்பு வண்ணத்தை சிலர் கருதக் கூடும். ஆனால், தமது திருமண நிச்சயதார்த்தத்தின் போதும் சோஃபியா கருப்பு வண்ணத்தையே பயன்படுத்தியுள்ளார், அது அவரது கணவரின் விருப்பமாகவும் இருந்தது என்றார்.

சோஃபியா மட்டுமல்ல அவரது கணவரும் பாரம்பரிய உடைகளை தவிர்த்து அவருக்கு பிடித்தமான உடையிலேயே விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவில் சோஃபியா மட்டுமல்ல அவரது 3 சகோதரிகளும், 5 நெருங்கிய தோழிகளும் மற்றும் மணப்பெண் தோழியரும் கருப்பு வண்ண உடை அணிந்தே வந்துள்ளனர்.

வெள்ளை நிறம் கன்னிகைத்தன்மையை குறிக்கும் என்பதால் பாரம்பரியமாக பெண்கள் திருமணத்தின்போது வெள்ளை உடை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2015-10-16_9-19-03-720x711

2015-10-16_9-20-10

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி..!!
Next post நாளை நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் தொடங்கி வைக்கிறார்கள்..!!