2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு..!!
Read Time:1 Minute, 2 Second
2015ம் ஆண்டில் ஒபாமா மிச்செல் வருமானம் எவ்வளவு
2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு?
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கடந்த 2015-ம் ஆண்டில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலர் (சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம்) சம்பாதித்துள்ளனர் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து 81 ஆயிரத்து 472 டாலர் (சுமார் ரூ.54 லட்சம்) வருமான வரி செலுத்தி உள்ளனர்.
ஒபாமா தம்பதியர் தங்களது மொத்த வருமானத்தில் 14.7 சதவீதம் தொகையை 34 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating