பிரித்தானியாவில் விமானம், ட்ரோன் நேருக்கு நேர் மோதல்..!!

Read Time:2 Minute, 24 Second

sadsdsdபிரித்தானிய நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஜெட் என்ற அந்த பயணிகள் விமானம் நேற்று சுவிஸில் உள்ள ஜெனீவா நகரிலிருந்து லண்டனில் உள்ள Heath-row விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முயன்றுள்ளது.

இந்த விமானத்தில் 5 விமான குழுவினர் உள்பட 137 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஓடுதளத்தை நோக்கி விமானம் தரையிறங்க முயற்சித்த அதே வினாடி, எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

எனினும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் இந்த விபத்தை குறித்து பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

தரையிறங்கும் விமானத்தின் மீது ட்ரோன் போன்ற சிறிய விமானங்கள் மோதினால் பெரும்பாலும் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை.

ஆனால், ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் ஏதாவது ஒரு பக்க என்ஜினில் மோதினால், அது விமானத்தையே சாய்த்துவிடும் அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.

விமான நிலையப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து ட்ரோன் விமானங்களை இயக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக பயணிகள் விமானத்தின் மீது ஒரு ட்ரோன் விமானம் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புளொட் இயக்கத்தை, தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 72) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
Next post காரணம் என்ன.? காரை புதைத்த கோடிஸ்வரர்…!!