யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

Read Time:2 Minute, 5 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகள் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் நகரில் விலங்குகள் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த 1968ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குட்டி யானை ஒன்றுக்கு தற்போது 49 வயது நிறைவடைந்துள்ள்து.

இந்நிலையில், நேற்று முன் தினம் விலங்குகள் பூங்காவில் இருந்த யானைகள் கூட்டத்திற்குள் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, வயதான அந்த யானையை மற்ற யானைகள் முட்டி கீழே தள்ளி விட்டுள்ளன. இதனால் யானைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், யானையால் மேலே எழுந்து நிற்கவும் முடியாமல் தவித்துள்ளது. இதனை கண்ட விலங்குகள் பூங்கா பாதுகாவலர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் யானை கட்டி தூக்கியுள்ளனர்.

நீண்ட நேரம் நிகழ்ந்த போராட்டத்தில், வயதான அந்த யானை எழுப்பப்பட்டு ஒரு தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய விலங்குகள் பூங்கா பாதுகாவலர் ‘அவசியம் ஏற்பட்டால், வலி தெரியாமல் இருக்க யானைக்கு மயக்க ஊசி போடவுள்ளதாகவும், மற்ற யானைகளின் தொந்தரவு இல்லாமல் பாதுகாக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து 8 மாதமே ஆன மகளை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை…!!
Next post லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்…!!