கிளிநொச்சியில் யுத்தம் தந்த வடுக்களை தாங்கமுடியாது இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை…!!

Read Time:1 Minute, 57 Second

MG_0111-670x446-300x200கிளிநொச்சி கோணாவில் பகுதியில் யுத்தம் காரணமாக ஒரு பிள்ளையை இழந்தும் ஏனைய இரு பிள்ளைகள் காயமுற்ற நிலையிலும் மன உழைச்சலுக்குள்ளான பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் நேற்று (21-04-2016) மதியம் இச் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உதயபாலன் வளர்மதி (வயது 44) என்பவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரதேச அறையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி ப.திருலோகமூர்த்தி சடல பரிசோதனையினை சட்ட வைத்திய அதிகாரி ஜெயவர்த்தன ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் காரணமாக இவரது மகன் ஒருவர் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயரிழந்துள்ளதாகவும் அவரது நினைவு நாள் நேற்றாகும் என்றும் இதனைவிட இரண்டு பிள்ளைகள் யுத்தத்தில் படுகாயமடைந்து ஒரு பிள்ளை கண்பார்வையிழந்த நிலையில் உள்ளதாகவும் இதனால் விரக்தியடைந்த குறித்த தாயார் மன உழைச்சலுக்குள்ளாகியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழு (இன்று) வருடங்கள் கடந்து உறவினர்களால் இனம்காணப்பட்ட கணணிப்பிரிவுப் போராளி..!!
Next post வேதாரண்யம் அருகே விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நாகை கோர்ட்டு உத்தரவு…!!