By 24 April 2016 0 Comments

செக்ஸ் ஆசையை தூண்டும் உணவு வகைகள்…!!

செக்ஸ்-1-615x350பெரும்பாலான காமம் பெருக்கும் உணவுவகைகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் போன்ற உருவத்தில் அமைந்துள்ளன.

காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் பட்டியலிடுவதற்கு முன் உருவம், சுவை மற்றும் வாசனை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான காமம் பெருக்கும் உணவுவகைகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் போன்ற உருவத்தில் அமைந்துள்ளன.
காலத்தைக் கணக்கிட முடியாத முன்னரே, இவ்வகையான இயற்கை காமப்பெருக்கும் உணவு வகைகள் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு, காமத்தைப் பெருக்கி இன்பத்தை அதிகரிக்கச் செய்வதில் மிகச் சிறந்த ஆற்றலுடையதாக திகழ்கின்றன. அவை எந்த உணவுகள் என்று பார்க்கலாம்.

* ஒயின் குடிப்பதால் நம்முடைய காம உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களின் காம உணர்வுகளையும் மிகவும் நன்றாகத் தூண்டுகிறது. “பெண்களின் எதிர்ப்பு உணர்வுகளை மட்டுப்படச் செய்வதால், ஒயினானது காமப்பெருக்கியாகக்கருதப்படுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

* ஆணுறுப்பைப் போன்ற இதனுடைய உருவம் மட்டுமின்றி, இதில் பல்வேறு சிறந்த தன்மைகள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. குறிப்பாக இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்கச் செய்கின்றன.

* இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், அவர்களது ஆணுறுப்பு விரைப்படைவதில் பிரச்சனை ஏதும் இருக்காது. ஆணுறுப்பினை விரைப்படையச் செய்யும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன.

* ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகோடா. இப்பழமானது கவர்ச்சியாக பெண்மை ததும்பும் வகையாக இருந்தாலும், மரத்தில் தொங்கும் போது இவற்றைப் பார்க்கையில், ஆண்களின் விதைப்பைகள் போன்று காட்சியளிக்கின்றன. இப்பழத்தில் பீட்டா கரோட்டின், மக்னீ சியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்தது. இவை அனைத்தும் மனிதர்களின் காம உணர்வைத் தூண்ட வல்லவை.

* பழங்காலம் தொட்டே, அத்திப்பழமானது இனப்பெருக்கத்தோடு தொடர்புடையதாகவே இருந்தது. அத்தி ப்பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அ

* ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரொடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன. இவை நமது உணர்ச்சிப் பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் கூட்டுகின்றன. இதனால், நாம் சாக்லெட் சாப்பிடும் போது, நமது உணர்ச்சிப்பெருக்கும், ஆற்றல் நிலையும் உயர்ந்து, நமது காம உணர்வு (mood) தூண்டப்படுகிறது.

ஃபீனைல் எத்திலமைன் உடன் அனன்டாமைடு (Anand amide ) என்னும் வேதிப்பொருள் சேர்ந்து, பாலுறவின்போது, உச்சக்கட்டத்தை அடைவதில் உதவுகின்றன.
* மிளகாயின் காரத்தன்மையினால் உடலினை சூடேற்றி, இது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.

உ டல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய்கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் பாலுறவின் போதும் ஏற்படுகின்றன. இதனால் தான், மிளகாயானது ‘காமப்பெருக்கி’ என்று அழைக்கப்படுகிறது. கேப்சைசினானது, உடலில் எண்டோர் ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது.

மேலும் நரம்பு முனைகளை தூண்டி, இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

முக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை.Post a Comment

Protected by WP Anti Spam