குவிந்து கிடக்கும் வாயு முகமூடிகள்! மயான நிலையில் மருத்துவமனைகள்: மறக்கமுடியாத செர்னோபில் துயரம்…!!

Read Time:2 Minute, 23 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)சோவித் நகரமான Pripyat ல் மருத்துவமனைகள், பாடசாலைகள், கைநெகிழ்ந்த நிலையில் காணப்படும் வீடுகளில் குவிந்து கிடக்கும் நச்சு வாயு முகமூடிகள் என அனைத்தும் செர்னோபில் பயங்கரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளன.

Pripyat நகரம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுச்சிமிகு நகரமாகவே திகழ்ந்துள்ளது. இங்குதான் அறிவியல் ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பம் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வந்தனர்.

ஆனால் இவை அனைத்தும் 1986 ஏப்ரல் 26 ஆம் திகதி செர்னோபில் அணு உலை விபத்துக்குள்ளாகும் வரை மட்டுமே. தற்போது உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான இந்த நகரம் செர்னோபில் விபத்திற்கு பின்னர் கைநெகிழப்பட்டது.

இங்குள்ள கடைகள் மற்றும் தேநீர் விடுதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கும் என கூறுகின்றனர். திரையரங்குகளும் கேளிக்கை விடுதிகளும்அரங்கம் நிறைந்த காட்சிகளை வழங்கி வந்துள்ளன.

குறிப்பாக விளையாட்டுத் திடல்களில் வட்டமிடும் பாடசாலை சிறார்களின் சிரிப்பொலி அந்த தெரு வீதி எங்கும் எதிரொலிக்குமாம்.

இதுவனைத்தும் ஒரு விபத்தில் நிலைகுலைந்து சின்னபின்னமானது. இந்தஅணு விபத்தில் 31 பேர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அந்த நாளின் தொடர்ச்சியாக கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய்க்கு இரையானவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

இதுவரை நடந்துள்ள அணு உலை விபத்துக்களில் மிகவும் கொடுமையானதும்வீரியம் அதிகம் கொண்டதுமான விபத்து இதுவென அணு ஆய்வு குறிப்பு தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா நாட்டில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 வயது குழந்தை..!!
Next post ரஷ்யாவில் பயங்கரம்: பொலிஸ் அதிகாரி உள்பட 5 குடும்ப உறுப்பினர்கள் கொடூர கொலை…!!