ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அனல் காற்றுக்கு 162 பேர் பலி..!!

Read Time:2 Minute, 46 Second

timthumbஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் கோடை வெயில் இப்போதே மக்களை வறுத்து எடுக்கிறது.

கோடை காலத்தில் வழக்கமாக இருக்கும் வெப்ப நிலையைவிட இந்த ஆண்டு மிக கடுமையாக இருக்கிறது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுகிறது.

தெலுங்கானா, ஒடிசாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

ஒடிசாவில் அனல் காற்றுக்கு இதுவரை 73 பேர் இறந்து உள்ளனர். மாநிலத்தில் கடநத சில நாட்களாகவே 105 டிகிரிக்கு அதிகமாக வெப்ப நிலை உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒடிசா அரசு அறிவித்து உள்ளது.

இதே நிலைதான் தெலுங்கானாவிலும் ஏற்பட்டு உள்ளது. உச்ச வெள்ள நிலையாக கம்மம் மாவட்டத்தில் நேற்று 113 டிகிரி வெப்ப நிலை பதிவானது. நல்கொண்டாவில் 112 டிகிரி பதிவானது ஐதராபாத்தில் 105 டிகிரி வெப்ப நிலை பதிவானது.

அனல் காற்றுக்கு இதுவரை 49 பேர் பலியாகி இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று ஐதராபாத் வானிலை மையம் அறிவித்து உள்ளது. எனவே பகலில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று தெலுங்கானா அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆந்திராவில் வெயிலுக்கு 40 பேர் பலியாகி இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 100 டிகிரி வெப்ப நிலைதான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 113 டிகிரி இப்போதே பதிவாகி உள்ளது. அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதும் குளுமையாக இருக்கும் திருப்பதி திருமலையில் கூட இந்த ஆண்டு 105 டிகிரிக்கு அதிகமாக வெப்ப நிலை ஏற்பட்டு உள்ளது. மதியம் மாட வீதியில் பக்தர் கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்ம சாவு…!!
Next post 5 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய நபர் கைது…!!