பொலிசால் சுட்டு கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்: 87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு…!!

Read Time:2 Minute, 7 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)அமெரிக்க நாட்டில் பொலிஸ் அதிகாரியால் தவறுதலாக சுட்டு கொல்லப்பட்ட 12 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 87 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓஹியோ மாகாணத்தில் உள்ள Cleveland என்ற நகரில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி பொலிசாருக்கு ஒரு அவசர தகவல் கிடைத்துள்ளது.

‘நகரின் மையத்தில் ஒரு சிறுவன் துப்பாக்கியை ஏந்தியவாறு இருப்பதாக’ தகவல் கிடைத்துள்ளது.தகவலை பெற்ற பொலிஸ் அதிகாரியான Timothy Loehmann என்பவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, Tamir Rice என்ற 12 வயது சிறுவன் போலியான துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு இருந்ததை பார்த்து விசாரணை எதுவும் செய்யாமல் சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்து சிறுவன் உயிருக்கு போராடியுள்ளான்.

ஆனால், உண்மை நிலையை அறிந்த பின்னரும் அந்த பொலிஸ் அதிகாரி சிறுவனுக்கு முதலுதவி அளிக்காததால் சிறுவன் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவ தொடர்பாக Cleveland நகர் மீது வழக்கு தொடக்கப்பட்டது.சுமார் 2 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, சிறுவனை தவறுதலாக சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக சிறுவனின் குடும்பத்திற்கு 6 மில்லியன் டொலர்(87,67,80,000 இலங்கை ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்: உடல் சிதைந்து பலியான பரிதாபம்…!!
Next post பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?