By 29 April 2016 0 Comments

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: 10 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்..!!

V.E.N.Media_-300x225கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாறை பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் வெஸ்டி (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்,

ஜோனின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தேவசி. இவர் மதுபழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மது குடிக்க அப்பகுதியில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வருவது வழக்கமாம். மேலும் பணம் தரவில்லை என்றால் சில நேரங்களில் தாக்கி விடுவாராம்.

இந்த நிலையில் நேற்று மாலை வெஸ்டியிடம் அவரது தாய் லினியா முட்டை வாங்கி வர கூறியுள்ளார். இதனால் சிறுவன் வெஸ்டி முட்டை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான்.

அப்போது அந்த பகுதியில் தேவசி நின்று கொண்டு சிலரிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.

இந்த சமயத்தில் சிறுவன் வெஸ்டி அங்கு நடந்து சென்று கொண்டிருந்தான். உடனே வெஸ்டியை தடுத்து நிறுத்தி தேவசி மது குடிக்க பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன வெஸ்டி தனது வீட்டை நோக்கி வேகமாக நடந்து சென்றான்.

இதனால் ஆத்திரம் அடைந்த தேவசி, தான் வைத்திருந்த கத்தியால் சிறுவன் வெஸ்டியை மார்பு, கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வெஸ்டி உயிருக்கு போராடினான்.

உடனே தகவல் அறிந்து தந்தை ஜோன், தாய் லினியா ஆகியோர் பதறியடித்து கொண்டு அங்கு வந்தனர். பின்னர் மகன் வெஸ்டியை மீட்டு கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பலனின்றி சிறுவன் வெஸ்டி பரிதாபமாக இறந்தான்,

இந்த சம்பவம் பற்றி கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறுவனை கொன்ற தேவசியை போலீசார் கைது செய்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam