கைதியுடன் தப்பிய பெண் பாதுகாவலர்: விடுதலை செய்த நீதிமன்றம்…!!

Read Time:2 Minute, 11 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)சுவிட்சர்லாந்து நாட்டில் சிறைக்கைதியுடன் தப்பிய பெண் காவலர் மீண்டும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிமன்றம் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.

சுவிஸில் உள்ள Limmattal என்ற சிறைச்சாலையில், சிரியா நாட்டை சேர்ந்த Hassan Kiko என்ற கைதி சிறுமி ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்தார்.

இதே சிறைச்சாலையில், Angela Magdici என்ற பெண் ஒருவர் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதால் கடந்த பெப்ரவரி மாதம் இருவரும் சிறையில் இருந்து தப்பி இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

கடுமையான தேடுதல் வேட்டைக்கு பிறகு, இருவரையும் இத்தாலி பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், சுவிஸ் அரசின் கோரிக்கையை ஏற்று பெண் பாதுகாவலரை மட்டும் இத்தாலிய அதிகாரிகள் சுவிஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கைதி தற்போது இத்தாலி பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். இந்நிலையில், பெண் பாதுகாவர் மீதான வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, தனக்கு ஜாமீன் வேண்டும் என பெண் பாதுகாவலர் நீதிபதியை கோரியுள்ளார். அவருடைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சில நிபந்தனைகளுடன் தற்காலிகமாக விடுதலை செய்வதாகவும், பொலிசாருக்கு தெரிவிக்காமல் வெளியூர் எங்கும் செல்லக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டு விடுதலை செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெருநாயை கட்டியணைத்து காப்பாற்றிய மாணவி- நெஞ்சை உருக்கும் புகைப்படம்…!!
Next post நடுவானில் பிரசவமான ஆண் குழந்தை: விமானத்தின் பெயரையே சூட்டிய தாயார்…!!