உடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள்…!!

Read Time:5 Minute, 12 Second

massage_dot_001.w245நமது உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோனில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நமது உடலில் அமைந்திருக்கும் சில புள்ளிகளில் மசாஜ் செய்தே சரி செய்ய முடியும். கிட்டத்தட்ட இதுவும் அக்குபஞ்சர் முறையை போன்றது தான். உடல் பாகங்களின் செயற்திறன் ஊக்குவிப்பு, உடல் உறுப்புகளில் ஏற்பட்ட செயற்திறன் குறைபாடு போன்றவற்றுக்கும் தீர்வுக் காண முடியும்.

இது மட்டுமின்றி, உடல் எடை குறைக்க, செரிமானத்தை ஊக்குவிக்க, நல்ல உறக்கம் பெற என அன்றாடம் நீங்கள் உடல்நலன் சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் இந்த புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் நல்ல பலனடைய முடியும். இனி, உடலில் உள்ள 7 புள்ளிகளில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…

முதல் புள்ளி – முகத்தில், இதழ்களுக்கு மேல்!

இதழின் மேல் நடுவில் இப்புள்ளியை மிருதுவாக அழுத்தி மசாஜ் செய்வதால். அதிகமான பசியை குறைக்க முடியும். மேலும், இது பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை குறைக்க முடிகிறது. தினமும் இரண்டு முறை ஐந்து நிமிடங்கள் இந்த புள்ளியை அழுத்தி மசாஜ் செய்வதால் நல்ல உடல்நலனை ஊக்குவிக்கும்.

இரண்டாவது புள்ளி – முழங்கைக்கு கீழ்

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, ஒரு நிமிடம் இந்த இடத்தில் மிருதுவாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது உடல் சூட்டை தணிக்கவும், குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இடத்தின் வழியாக தான் பெரும்பாலான உடல் சக்தி வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது புள்ளி – முழங்காலுக்கு கீழ்!

இந்த புள்ளி உடல்நலனை ஊக்குவிக்க வல்லது. இது செரிமானத்தை சீராக்க பெரிதும் உதவுகிறது. இந்த புள்ளியை கண்டறிய, உங்கள் இடது முட்டியை வலது கையால் மறைத்து உங்கள் சிறு விரலுக்கு கீழ் இந்த இந்த புள்ளி அமைந்திருக்கும். (படத்தில் இருக்கும் இடம்) இந்த புள்ளியில் கடிகார சுழற்சியை போல இரண்டு கால்களிலும் 9 முறை என பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும். உறங்கும் முன்னர் இதை செய்வதால் நல்ல உறக்கம் பெறலாம்.

நான்காவது புள்ளி – காதின் அருகில்!

உங்கள் கட்டை விரலை பயன்படுத்தி மிருதுவாக அழுத்தம் கொடுத்து மூன்று முறை மூன்று நிமிடங்கள் என மசாஜ் செய்து வந்தால் உங்கள் வளர்சிதை மாற்றம் மேலோங்கும். இதனால், உடல் எடை குறையவும் வாய்ப்பிருக்கிறது.

ஐந்தாவது புள்ளி – தொப்புளுக்கு கீழ்!

உங்கள் தொப்புளில் இருந்து மூன்று சென்டிமீட்டர் அளவு கீழ் இந்த புள்ளி அமைந்திருக்கும். இந்த புள்ளியில் உங்கள் விரலை கொண்டு மேலும், கீழுமென மிருதுவாக தினமும் இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்வதால் செரிமானம் சீராகும், உடல் எடை குறையும்.

ஆறாவது புள்ளி – கணுக்கால் பகுதியில்!

கணுக்காலின் உட்புறத்தில், கணுக்கால் மூட்டில் இருந்து இரண்டு இன்ச் மேலே இந்த புள்ளி அமைந்திருக்கும். இந்த புள்ளியில் மசாஜ் செய்வதால் மண்ணீரல் மற்றும் செரிமான மண்டலம் வலுபெறும். கட்டை விரல் பயன்படுத்தி ஒரு நிமிடம் அளவு மசாஜ் செய்து வந்தாலே போதுமானது. தினமும் இந்த மசாஜ் செய்து வந்தால் நல்ல பயன் பெற முடியும்.

ஏழாவது புள்ளி – வயிறு பகுதியில்!

இது பொதுவாக வயிற்றுக்கு மேல் கடைசி விலா எலும்பு பகுதியில் அமைந்திருக்கும். மிருதுவாக அழுத்தம் கொடுத்து ஐந்து நிமிடங்கள் தினமும் மசாஜ் செய்வதால் உடற்திறன் அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா?.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி…!!
Next post சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!