யானைகளைக் காக்க “அதிர்ச்சி வைத்தியம்”..!!

Read Time:2 Minute, 18 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)யானைகள் அவற்றின் தந்தத்திற்காக கொல்லப்படுவதை நிறுத்தும் ஒரு முயற்சியில், கென்யா, தன்னிடமுள்ள பெருமளவிலான யானைத் தந்தங்களை இன்று பின்னர் எரிக்கவிருக்கிறது.

உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் நோக்கிலான இந்த நடவடிக்கையின் மூலம், தந்தத்துக்காக நடக்கும்யானை வேட்டை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கென்யா முயல்கிறது.

கென்யா தலைநகர் நைரோபியின் தேசிய பூங்காவில் இன்று நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வில், 11 தீப்படுகைகளில்100 டன்களுக்கும் மேலான எடையுள்ள தந்தங்கள்கொளுத்தி அழிக்கப்படும்.

இந்தத் தந்த எரிப்பு நிகழ்வை கென்யாவின்அதிபர் உஹுரு கென்யாட்டா முதலில் எரியூட்டித் தொடங்கி வைக்கிறார்.

இந்த தந்தத் தீ, பலநாட்களுக்கு கொழுந்துவிட்டு எரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதமாகப் பெறப்படும் தந்தத்துக்கென்று சர்வதேச அளவில் இருக்கும் கிராக்கியால் உந்தப்பட்டு, யானை வேட்டைக்காரர்கள் யானையினத்தையே ஒட்டுமொத்தமாக அழிவிற்குக் கொண்டு செல்வதிலிருந்து யானைகளைக் காக்க தாங்கள் உறுதி பூண்டிருப்பதாக, உஹுரு கென்யாட்டாவும் பிற ஆப்ரிக்கத் தலைவர்களும் கூறியிருக்கின்றனர்.

யானைகளை சட்டவிரோதமாகக் கொல்வதை முடிவுக்குக் கொண்டுவர ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்களும், வர்த்தக மற்றும் தொழில்அதிபர்களும், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் நடத்திய முதல் உச்சிமாநாட்டின் முடிவாக இந்தத் தந்தத் தீயூட்டல் அமைகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!!
Next post திருமணத்திற்கு மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக துரத்தி துன்புறுத்திய நபர்..!!