18 ஆண்டாக பெண் வயிற்றில் இருந்து கத்திரிகோல் அகற்றம்: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன்..!!

Read Time:2 Minute, 24 Second

201605011806162345_18-year-woman-from-the-stomach-removal-scissor-Cole_SECVPFபெண் வயிற்றில் இருந்த கத்திரிகோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது

தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்நதவர் சாமிநாதன் மனைவி சரோஜா (60). 2 மகன், 2 மகள் உள்ளனர். சரோஜா பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 18 ஆண்டுக்கு முன்பு சரோஜா ஒரு அரசு ஆஸ்பத்திரியில் அப்பண் டீஸ் ஆபரேஷன் செய்து கொண்டார்.

ஆபரேஷன் செய்தபோது வயிற்றில் தவறுதலாக கத்திரிக்கோலை வைத்து தைத்து விட்டனர்.

2014–ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய சரோஜாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட போது அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரிந்தது.

ஆனால் ஏழ்மை நிலையில் இருந்த சரோஜா மீண்டும் ஆபரேஷன் செய்தால் பூ வியாபாரம் செய்ய முடியாமல் வருமானம் பாதிக்கும். வலி ஏற்பட்டால் சிகிச்சை பெறலாம் என்று உறவினர்களிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று வயிற்று வலியால் சரோஜா துடித்தார். உடனே அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு ஸ்கேன் செய்தபோது கத்திரிக்கோல் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சரோஜாவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. 18 ஆண்டாக அவரது வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சரோஜாவின் மகன் தேவராஜ் கூறுகையில், நாங்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறோம். தினமும் வேலைக்கு சென்றதால்தான் வருமானம். ஆபரேஷன் செய்யும் போது கவனமாக டாக்டர்கள் செய்ய வேண்டும். எனது தாய்க்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்…!!
Next post பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்! துருக்கியில் பதற்றம்..!!