By 6 May 2016 0 Comments

கேரளாவில் மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் தீவிரம்..!!

201605051328199417_Protest-rising-across-Kerala-over-college-girl-molested-and_SECVPFகேரளாவில் மாணவி கற்பழித்து கொலை செய்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் பெரும்பாவூர் குருப்பம் பட்டியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த 28-ந் தேதி கொடூரமாக முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது.

சட்டக்கல்லூரி மாணவியின் கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்திலும் மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியாக உள்ள 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி ஷிஜாவின் தாயார் ராஜேஸ்வரி, மகளுக்கு நடந்த இந்த கொடூரத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பெரும்பாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிபட்ட 6 பேரையும் போலீசார், ராஜேஸ்வரி சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அவர் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தினர். ஆனால் அவர்களில் யார் மீதும் தனக்கு சந்தேகம் இல்லை என்று ராஜேஸ்வரி போலீசாரிடம் கூறி விட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த 6 பேரில் ஒரு வாலிபரை ஷிஜா படித்த சட்டக்கல்லூரிக்கு போலீசார் அழைத்துச் சென்று ஷிஜாவின் தோழிகளிடம் காட்டி அவரை இதற்கு முன்பு பார்த்திருக்கிறார்களா? அவர் கல்லூரிக்கு வந்துள்ளாரா? என்பது போன்ற கோணங்களில் விசாரித்தனர். ஆனால் அவரை யாரும் பார்க்க வில்லை என மாணவிகள் தெரிவித்து விட்டனர்.

ஷிஜா துணிச்சல் மிக்கவர். அந்த பகுதியில் யாராவது தவறு செய்தால் அதை தட்டிக்கேட்கும் குணம் கேட்டவர். இதன் காரணமாக அவருக்கும், சிலருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதத்தையும் உருவாக்கி இருந்தது. இதனால் தனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணிய அவர் கையில் எப்போதும் பேனா காமிரா வைத்திருந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டுக்குள்ளேயே கற்பழித்து கொல்லப்பட்டதால் அவர் வைத்திருந்த பேனா காமிரா பயனில்லாமல் போய் விட்டது.

எனவே ஷிஜாவுடன் மோதலில் ஈடுபட்ட யாராவது தான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவ்வாறு மோதலில் ஈடுபட்டவர்களின் பட்டியலையும் சேகரித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையே மாணவி ஷிஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் 38 இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு இருந்தது. வயிற்றில் கடுமையாக தாக்கியதால் அவரது பெருங்குடல் வெளியே வந்து கிடந்தது. அவரது தலை முதல் உடல் முழுக்க காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாணவி ஷிஜாவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஷிஜாவின் கொலை நடந்து ஒரு வாரம் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகம் மற்றும் பெரும்பாவூரில் டி.ஒய்.எப்.ஐ. அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

மகளிர் அமைப்பினரும், மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் அமைப்பு சார்பில் ஒருவரை தூக்கில் தொங்க விடுவது போல வேடமிட்டு திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது.
அரசியல் தலைவர்கள் ஆறுதல்

மாணவியின் ஷிஜாவின் தாயார் ராஜேஸ்வரிக்கு முதல்-மந்திரி உம்மன்சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், மந்திரி ரமேஷ் சென்னிதலா, சாலக்குடி கம்யூனிஸ்டு எம்.பியும், நடிகருமான இன்னசென்ட், நடிகர் ஜெயராம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ராஜேஸ்வரிடம் உம்மன்சாண்டி கூறும்போது மாணவியின் சகோதரிக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சம் நிதி உதவியும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார். தற்போது சட்டசபை தேர்தல் விதி அமலில் இருப்பதால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று தான் இதை செய்ய முடியும் என்பதால் தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam