மழை வீழ்ச்சிக்காக செயற்கை மலை நிர்மாணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்கிறது..!!

Read Time:2 Minute, 54 Second

1646864aஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­கை­யாக மலை­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அந்­நாட்டு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர்.

மத்­திய கிழக்கு நாடான ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்சி குறை­வாக உள்­ளது. இந்­நி­லையில் காற்றை குளிர்­வித்து மழையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­கை­யாக மலை­யொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைத் தள­மாகக்கொண்ட யூனிவர்­ஸிட்டி கோர்ப்­ப­ரேஷன் ஃபோர் அட்­டோம்ப்­ஷயர் ரிசேர்ச் (யூ.சி.ஏ.ஆர்.) எனும் நிறு­வ­கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், இந்த செயற்கை மலைக்­கான மாதி­ரிகள் (மொடல்) குறித்து ஆராய்ந்து வரு­கின்­றனர் என தலைமை ஆராய்ச்­சி­யா­ள­ரான ரோலப் புருய்ன்ஜெஸ் தெரி­வித்­துள்ளார்.

முதற்­கட்ட நட­வ­டிக்­கையின் அறிக்­கை­யொன்று இந்த கோடைப் பரு­வத்தில் எமக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.

இத்­திட்­டத்­தின்­படி சுமார் 2 கிலோ ­மீற்றர் உய­ர­மான மலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனினும், இம்­மலை எந்த இடத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும், அதற்­கான செலவு எவ்­வ­ளவு என்­பது குறித்த விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. மலையை நிர்­மா­ணிப்­ப­தற்­காக பல்­வேறு இடங்கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன என ரோலப் புருய்ன்ஜெஸ் கூறினார்.

செயற்­கை­யாக மலையை நிர்­மா­ணிப்­பது இல­கு­வான விட­ய­மல்ல. இத்­திட்டம் அர­சாங்­கத்­துக்கு மிக அதிக செலவை ஏற்­ப­டுத்தும் எனில் இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட மாட்­டாது.

ஆனால், நீண்ட கால அடிப்­ப­டையில் எத்­த­கைய மாற்று வழி­களைக் கையா­ளலாம் என்­பது குறித்த ஒரு யோசனை இது” எனவும் அவர் தெரி­வித்தார்.

ஓமானுடனான எல்லையிலுள்ள 1925 மீற்றர் (6316 அடி) உயரமன ஜெபில் அல் ஜேசிஸ் சிகரமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயரமான சிகரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூர் அருகே 2 லாரிகள் மோதி தீப்பிடித்தது: டிரைவர் பலி…!!
Next post ஆபத்தான நிலையிலுள்ள மரங்களுக்கு விசேட சத்திர சிகிச்சைகள்..!!