ஆபத்தான நிலையிலுள்ள மரங்களுக்கு விசேட சத்திர சிகிச்சைகள்..!!

Read Time:2 Minute, 33 Second

16466600இந்­தி­யாவின் புது டில்லி மாந­கர சபை அதி­கா­ரிகள் ஆபத்­தான நிலை­யி­லுள்ள மரங்­களைக் காப்­பாற்­று­வ­தற்­காக அவற்­றுக்கு “சத்­தி­ர­சி­கிச்­சை­களை” அளித்து வரு­கின்­றனர்.

பழைய மற்றும் பூச்­சி­களால் அரிக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்­டுள்ள பாரிய மரங்­களின் சேத­ம­டைந்த பகுதிகளை குடைந்­தெ­டுத்து அவற்­றுக்கு உறு­தி­யளிக்கும் வித­மான கோல்­களைப் புகுத்தி அப்­ப­குதி மூடப்­ப­டு­கி­றது.

புது டில்லி மாந­கர சபையின் தாவ­ரங்­களைப் பாது­காக்கும் நிபு­ணர்கள் குழு­வொன்று இந்­ந­ட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுட்­டுள்­ளது.

இந்­தி­யாவில் இத்­த­கைய மரங்­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ளும் முதல் மாந­கர சபை இது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
“எமது எல்­லைக்­குட்­பட்ட பிர­தே­த­சத்­தி­லுள்ள அனைத்து மரங்கள் தொடர்­பா­கவும் நாம் ஆய்­வொன்றை மேற்­கொண்டோம்.

அவற்றில் பல மரங்கள் மிக வய­தா­ன­வை­யா­கவும் நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் அறிந்தோம்” என புது டில்லி மாந­கர சபையின் தவி­சாளர் நரேஷ் குமார் தெரி­வித்­துள்ளார்.

மனி­தர்­களின் எலும்­பு­க­ளுக்கு உறு­தி­ய­ளிப்­ப­தற்­காக கோல்கள் புகுத்­தப்­ப­டு­வதைப் போல் மரங்­க­ளு­க்கு சில வரு­டங்­களின் பின்னர் இவ்­வாறு கோல்கள் புகுத்­தப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மக்­களின் மீது மரங்கள் வீழ்ந்து­விடும் ஆபத்தை தவிர்ப்­பதும் இச்­சி­கிச்­சை­களின் நோக்­கங்­களின் ஒன்­றாகும் எனவும் நரேஷ் குமார் தெரி­வித்­துள்ளார்.

ஜேர்மனி போன்ற நாடுகளில் மரங்களின் ஆரோக்கியம் விசேட ஈ.சி.ஜி. இயந்திரங்களின் மூலம் அடிக்கடி சோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழை வீழ்ச்சிக்காக செயற்கை மலை நிர்மாணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்கிறது..!!
Next post சாதனை படைக்கவிருக்கும் 6 சுவிஸ் இளைஞர்கள்…!!