வவுனியாவில் வர்த்தக நிலையம் மீது கைக்குண்டுத் தாக்குதல் கதவடைக்காததே காரணம்
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள கோழித்தீன் விற்பனை செய்யும் தனியாருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது நேற்று (19.05.;2006) பிற்பகல் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த புலி உறுப்பினர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புலிகளால் அழைப்பு விடுக்கப்பட்ட கதவடைப்பு போராட்டத்தின் போது வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் இதனாலேயே குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மீது புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர் என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.