தாகூரின் 155-வது பிறந்தநாள் கொண்டாட்டம் எகிப்து நாட்டில் தொடங்கியது..!!

Read Time:2 Minute, 3 Second

201605090635247084_Festival-to-mark-Tagores-birth-anniv-inaugurated-in-Egypt_SECVPFரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள் எகிப்த் நாட்டில் தொடங்கியுள்ளது.

ரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள் எகிப்து நாட்டில் தொடங்கியுள்ளது.

நோபல் பரிசுபெற்றவரும், புகழ்பெற்ற கவிஞருமான ரவீந்திரநாத் தாகூர் 1878 மற்றும் 1926-ம் ஆண்டுகளில் எகிப்துக்கு சென்றுள்ளார். எகிப்தின் புகழ்மிக்க கவிஞர் அகமது ஷாவியுடன் தாகூர் நட்பு கொண்டிருந்தார்.

இதனால் தாகூருக்கும் எகிப்திற்கும் நெருக்கமாக பந்தம் இருந்து வந்தது. தாகூரின் 150வது பிறந்த நாள் நினைவாக அவரது உருவச் சிலையை எகிப்தில் கடந்த 2012-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், தாகூரின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு எகிப்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கலாசாரப் பிரிவு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தாகூரின் பிறந்தநாளான நேற்று முதல் அந்த நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

தாகூரின் ஓவிய கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எகிப்த் நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா நேற்று தொடங்கி வைத்தார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 12-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் அண்ணனை சுட்டு கொன்ற தம்பி…!!
Next post செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்…!!