சுவிஸில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்…!!

Read Time:1 Minute, 51 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசெர்ன் நகரில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அந்நகர பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சுவிஸின் லூசெர்ன் நகரின் மத்தியில் ஒரு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.

அதிகளவில் ஒயின்களை விற்பனை செய்யும் இந்த மதுக்கடைக்கு நேற்று மாலை 6.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது, மதுக்கடையில் பெண் பணியாளர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

பெண்ணை நெருங்கிய நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாததால், உயிருக்கு பயந்த அந்த பெண் சில ஆயிரம் பிராங்குகளை அளித்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிடுகிறார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்னதாக இதே நகரில் உள்ள Old Town என்ற பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் அடுத்தடுத்து ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு வாரத்தில் 3 கொள்ளை சம்பவங்கள் ஒரு நகரில் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது…!!
Next post காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பொலிசார்…!!