ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ’கொரில்லா குரங்கு’…!!

Read Time:2 Minute, 14 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)அமெரிக்காவின் New Hampshire பகுதியில் இருந்த விலங்குகள் பூங்கா ஒன்றில் உள்ள விலங்குகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

New Hampshire பகுதியில் கடந்த 1924ம் ஆண்டு, ஜான் பென்சன் என்பவரால் விலங்குகள் பயிற்சி மையமாக தொடங்கப்பட்டு, பின்னர் 2 ஆண்டுகளில் பொது மக்கள் பார்வைக்காக உயிரியல் பூங்காவாக செயல்பட தொடங்கியுள்ளது.

ஜான் பென்சன் அமெரிக்காவின் 26வது ஜனாதிபதி டெட்டி ரூஸ்வெல்ட்டின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அப்போது நடந்த அரசியல் பேரணிகளுக்காக இங்கிருந்த யானைகள், கழுதைகள் உள்ளிட்ட பல விலங்குகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

புலிகள், யானைகள், குரங்குகள், கரடிகள் என பல்வேறு வன உயிரினங்கள் அங்கு உள்ளன. அவற்றில் டோனி என்ற கொரில்லா குரங்கு, விளம்பரத்திற்காக 1980-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வைக்கப்பட்டுள்ளது.

1932-33 ஆண்டுகளில் நடந்த விரிவாக்க பணிகளை அடுத்து, இங்கு எண்ணற்ற சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெரும் புகழ்பெற்று விளங்கிய இந்த பூங்கா பின்னர் பலரிடம் கைமாறியுள்ளது. பின்னர் கடந்த 1987ம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் பார்வைக்காக அந்த பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பூங்கா பார்வையாளர்களின் எண்ணிக்கையால் கொடிக் கட்டி பறந்த நாட்களில், கறுப்பு வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் நிலையத்தில் பயணிகளை சரமாரியாக தாக்கிய நபர்: ஒருவர் பலி….மூவர் படுகாயம்…!!
Next post பிரித்தானியாவில் அதிக செல்வாக்கு பெற்றவர் மகாராணியா? குட்டி இளவரசியா?