11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!!

Read Time:2 Minute, 12 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (4)டெல்லி அருகே பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளனர்.

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் இரண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 18 மாணவர்கள் மீது நொய்டா பொலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த அந்த 2 மாணவர்களை 12ம் வகுப்பு மாணவர்கள் ’ராகிங்’ செய்துள்ளனர். மேலும் அவர்களை இரும்பு கம்பிகளை கொண்டு மூட்டுகளில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம்டைந்த இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான துருவ் அகர்வால் கூறுகையில், 12ம் வகுப்பு மாணவர்கள் எங்களை தொடர்ந்து ராகிங் செய்துவந்தனர்.

அவர்கள் எங்கள் உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். உணவு பாக்கெட்டுகள் சீல் உடைக்கப்பட்டு இருந்தால் அவற்றை எங்கள் முகத்தில் வீசி அவமானப்படுத்துவார்கள்.

மற்றொரு மாணவனின் தந்தை யாஷ் பிரதாப் சிங்கின் தந்தை அர்ஜுன் சிங் கூறுகையில், என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை எனக்கு தெரிவிக்காத பள்ளி நிர்வாகம் தான் இதற்கு காரணம்.

அந்த மாணவர்கள் என் மகனை இரும்பு கம்பிகளால் அடித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் என் மகனின் நிலை பற்றி எந்த தகவலும் எனக்கு அளிக்கவில்லை.

எனது மகன் தான் எனக்கு நடந்ததை தெரிவித்தான். அவன் இந்த பள்ளி செல்ல தொடங்கியே 15 நாட்கள் தான் ஆகிறது என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!
Next post துபாய் கண்காட்சியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கார் அறிமுகம்..!!