குட்டிக் கரணம் அடித்து பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கர் – வீடியோ…!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தெரு ரேசில் ஈடுபட்டு தலைகீழாக குட்டிக் கரணம் அடித்து, தீப்பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கரைப் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது.
கலிபோர்னியா நகரின் ரிவர்சைட் பகுதியில் இள்ள இன்டியானா அவென்யூ பகுதியில் தெரு ரேசில் ஈடுபட்டிருந்த ஒரு ஹோண்டா கார், படுவேகமாக வந்து, தலைகுப்புற கவிழ்ந்து, நொடிப் பொழுதில் தீப்பற்றி எரிந்தது.
இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் மேனேஜரான சான்ட்டியாகோ போர்ட்டிலோ என்பவர் தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். அப்போது, கவிழ்ந்து கிடந்த காரின் ஜன்னல் வழியாக ஒரு வாலிபரின் கை அவரது கண்ணில் பட்டது. உள்ளே ஒருவர் சிக்கியிருப்பதை அறிந்த அவர், செல்போனை தூக்கி வீசிவிட்டு, பற்றி எரியும் காரை நோக்கி விரைந்தார்.
அரை மயக்க நிலையில் காரினுள் கிடந்த அந்த வாலிபரை அங்கிருந்து இழுத்துவந்த சான்ட்டியாகோ, அவ்வழியாக சென்றவர்களை உதவிக்கு அழைத்து, மயங்கி கிடந்த ரிகார்டோ நியுனெஸ் என்ற அந்த வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அவரது செல்போனில் பதிவாகி, இணையதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை உரிய நேரத்தில் காப்பாற்றிய அவரது கடமையுணர்வை ‘நல்ல சமார்ட்டியன்’ (நல்ல குடிமகன்) என்ற அடைமொழியுடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்..,
Average Rating