ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா…!!

Read Time:5 Minute, 2 Second

whatrubbinganoniononyourhandcandoforyouவெங்காயம் ஓர் சிறந்து மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். ஆனால், நாம் அதை தான் முதலில் உணவில் இருந்து ஒதுக்குவோம். நமக்கு தான் நல்லது என்றாலே பிடிக்காதே. ஆனால், வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் மட்டுமல்ல, சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் கூட நன்மைகள் உண்டாகும்.

பொதுவாக நாம் வெங்காயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் ஊக்குவிக்கும் என மட்டும் தான் அறிந்திருப்போம். ஆனால், தீப்புண், பூச்சிக்கடி, நச்சு, காது வலி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சிராய்ப்பு, மாதவிடாய் பிடிப்பு என பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வெங்காயம் சிறந்த தீர்வளிக்க கூடியது.

காய்ச்சல்

காய்ச்சல் அதிகமாக இருந்தால், வெங்காயத்தை சன்னமாக வெட்டி உறங்கும் போது சாக்ஸ் அணிந்து அதுக்குள் வைத்து தூங்குங்கள். எழுந்திருக்கும் போது காய்ச்சல் குறைந்திருக்கும்.

தீ காயங்கள்

வெங்காயத்தை இரண்டாக நறுக்கு, தீக் காயம் உண்டான இடத்தில் தேய்த்தால், எரிச்சலை குறைப்பது மட்டுமின்றி, தழும்பு உண்டாகாமலும் காக்கும். மேலும், தொற்று அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

நச்சு

வெங்காயம் பாக்டீரியாக்களை உள்வாங்கும் தன்மை கொண்டதாகும். எனவே, தொற்று ஏற்பட்ட இடத்தில் வெங்காயம் கொண்டு தேய்ப்பதால் தொற்று கிருமிகள் பரவுதலை தவிர்க்க / குறைக்க முடியும்.

பூச்சிக்கடி

பூச்சிக்கடித்த இடத்தில் வெங்காயத்தை இரண்டாக அறுத்து தேய்த்தால், எரிச்சல் குறையும் மற்றும் வீக்கம் பெரிதாகாமல் தடுக்க முடியும்.

காதுவலி

தீக்காயம், பூச்சிக்கடி மட்டுமின்றி காது வலிக்கும் தீர்வு தரும் தன்மையுடையது வெங்காயம். ஆம், பூண்டை சிறியளவு அறுத்து, காதின் முன் பகுதியில் வைத்தால், இது காது வலியை குறைக்கும்.

தொண்டை கரகரப்பு

வெங்காயத்தை உரித்து சுடு நீரில் கொதிக்க வைத்து. அந்த நீரை டீயாக வைத்து குடித்தால். தொண்டை கரகரப்பு குறையும்.

சிராய்ப்பு

சுவர் அல்லது மரத்தில் எங்காவது உரசி தோலில் சிராய்ப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டானால், வெங்காயத்தை பிழிந்து அந்த ஜூஸை அந்த இடத்தில் பஞ்சில் நனைத்து கட்டுங்கள். ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் குறைந்துவிடும்.

சருமம் நிறமூட்டல்

மஞ்சளில் வெங்காயம் பிழிந்த ஜூஸ் கலந்து பஞ்சில் நனைத்து சருமத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து துடைத்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

மாதவிடாய் பிடிப்பு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சில சமயம் பிடிப்பு ஏற்பட்டு வலி மிகுதியாக உண்டாகும். அந்த நேரத்தில், ஓரிரு பச்சை வெங்காயத்தை வாயில் போட்டு மென்று வந்தால் வலி நீங்கும்.

ஞான பல் வலி

அனைவருக்கும் கடைசியாக முளைக்கும் ஞான பல் கொடுக்கும் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் சிறிய அளவிலான வெங்காயத்தை மென்று வந்தாலோ அல்லது அவ்விடத்தில் வெங்காயத்தை வைத்துக் கொண்டாலோ வலி குறையும்.

சேற்று புண்

நீரில் அதிக நேரம் கால் ஊறினால் சேற்று புண் வர வாய்ப்புகள் இருக்கிறது. அந்த நேரத்தில், சிறியளவிலான வெங்காயத்தை அறுத்து. அந்த இடத்தில் கட்டுக் கொண்டால் சேற்று புண் சீக்கிரம் ஆறும்.

வாந்தி

வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால், இரண்டு டீஸ்பூன் அளவு வெங்காய ஜூஸ் மற்றும் மிளகு டீ குடியுங்கள், வாந்தி வருவது நின்றுவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி…!!
Next post இந்த ஒட்டகத்திற்குள் இன்னொரு மிருகம் மறைந்திருக்குது… கண்டுபிடிங்க பார்ப்போம்…!!