பண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்-2 மாணவர் பலி: அதிர்ச்சியில் தாய் மரணம்..!!

Read Time:3 Minute, 50 Second

201605141037488678_truck-collision-plus-two-student-death-near-panruti_SECVPFபண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்–2 மாணவர் பலியானார், அதிர்ச்சியில் அவரது தாய் மரணமடைந்தார்.

பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). பண்ருட்டி அருகே காமாட்சி பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகன் புருஷோத்தமன் (17). நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று காலை வேலு மணியும், தனலட்சுமியும் நெல்லிகுப்பத்தில் உள்ள உறவினர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

புருஷோத்தமனை வீட்டில் இருக்கும்படி கூறினர். ஆனால், அவர் நண்பர்களை பார்ப்பதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு புறப்பட்டார்.

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது எதிரே லாரி வேகமாக வந்தது.

அந்த லாரி திடீரென்று புருஷோத்தமன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து புருஷோத்தமனை மீட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புருஷோத்தமனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து வேலுமணியும், தனலட்சுமியும் அங்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி துடித்தனர். வேலுமணி-தனலட்சுமி தம்பதியருக்கு புருஷோத்தமன் ஒரே மகன் ஆவார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் வேலுமணியும், தனலட்சுமியும் புதுவையில் இருந்து பண்ருட்டி லிங்கா ரெட்டி பாளையத்திற்கு வந்தனர். தொடர்ந்து தனலட்சுமி அழுது கொண்டே இருந்தார்.

விபத்து குறித்து புகார் செய்வதற்காக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு வேலுமணி சென்று விட்டார். அந்த சமயத்தில் திடீரென்று தனலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த வேலுமணி, தனது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஒரே நேரத்தில் மகனையும், மனைவியையும் இழந்த அவர் கதறி துடித்தது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

விபத்து தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -1)
Next post விசித்திர நோயால் உடல் முழுவதும் முடி வளர்ந்து அவதிப்படும் 12 வயது வங்காளதேச சிறுமி..!!