கைப்பேசியை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய மருத்துவர்கள்…!!

Read Time:1 Minute, 53 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் மனநல காப்பகத்தில் உள்ள கைதி ஒருவர் கைப்பேசியை விழுங்கியதால் அறுவை சிகிக்சைமூலம் மருத்துவர்கள் அதனை வெளியேற்றுள்ளனர்.

அமெரிக்காவின் Dublin நகரில் செயல்பட்டு வரும் மனநலகாப்பகத்தில் இருந்த, 29 வயதான கைதி ஒருவர், 6.8 × 2.3 × 1.1 cm அளவீடு கொண்ட கைப்பேசியை விழுங்கியுள்ளார்.

விழுங்கி 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் கைப்பேசியை விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

கைப்பேசியை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு விடாப்பிடியாக வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்துஅவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைச்சென்றனர்.

எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளி மற்றும் வீடியோ கமெராவினை பயன்படுத்தி பார்த்தபோது, உணவுக்குழாயின் வழியாக கைப்பேசியானது வயிற்றுக்குள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் அவரது வயிற்றுப்பக்கவாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கைப்பேசியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அக்கைதி தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்து: 42 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!
Next post சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..!!