வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த சுற்றிவளைப்பு..!!

Read Time:2 Minute, 26 Second

4eac2c91-2f62-4120-ba79-4f3f7faeb64bவடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் சமீபகாலமாக வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை கைது செய்வது தொடர்பில் விசாரணைகைள முன்னெடுத்துள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரவித்தனர்.

வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை களமிறக்குமாறு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் ஏற்கனவே பாதுகாப்புப் கடைமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவவேளை, வட மாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ். ஆயர் ஜஸ்டின் ஞாப்பிரகாசம் தலைமையிலான சமூக அக்கறைக்கொண்ட குழு ஒன்று கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது.

மேலும் குறித்த குழு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!
Next post மூன்று தினங்களாக நீர் இல்லை – மக்கள் அவதி..!!