இந்த பீட்ஸாவின் பெட்டியையும் சுவைத்து உண்ணலாம்…?? பார்த்தால் அசந்திடுவீங்க…??
Read Time:1 Minute, 15 Second
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பீட்ஸா நிலையமொன்று பீட்ஸா வைக்கப்பட்டுள்ள பெட்டியையும் உண்ணப்படக்கூடியதாக தயாரிக்கிறது.
உணவு கொண்டுள்ள கோப்பையையும் சேர்த்து உண்ணப்படக்கூடியதாக தயாரிக்கப்பட்ட உணவே பீட்ஸா என்பார்கள்.
ஆனால், நியூயோர்க் புரூக்ளின் பகுதியிலுள்ள “வின்னீஸ் பீட்ஸேரியா” எனும் பீட்ஸா தயாரிப்பு நிறுவனமானது பீட்ஸா பெட்டியையும் 100 சதவீதம் உண்ணப்படக்கூடியதாக தயாரித்துள்ளது.
பீட்ஸாவை பொதி செய்வதால் ஏற்படும் வீண் விரயத்தை தவிர்க்கும் நோக்குடன் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சீன் பேர்தியம் இத் திட்டத்தை ஆரம்பித்தாராம்.
இந்தப் பெட்டியை நீங்கள் எறிந்துவிட வேண்டியதில்லை. அதையும் உண்ணலாம் என்கிறார் சீன்.
Average Rating