குஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

Read Time:1 Minute, 26 Second

201605161429069096_Jamnagar-MP-Poonamben-falls-into-drain-during-demolition_SECVPFகுஜராத் மாநிலம் ஜாம்நகர் சிட்டி தொகுதி எம்.பி.யான பூனம்பென் மடாம் தன்னுடைய தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகளை பார்வையிட்டார். அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, குடிசைவாழ் மக்கள் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று எம்.பி.யிடம் உதவி கோரியுள்ளனர்.

அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் உள்ள சிமெண்ட் ‘சிலாப்’பில் நின்று கொண்டு மக்களிடம் பிரச்சனையை கேட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலாப் உடைந்து எம்.பி. சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அவருடன் நின்றவர்களும் கும்பலாக உள்ளே விழுந்துவிட்டனர்.

இதனால் எம்.பி.யின் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை…!!
Next post பிரான்ஸ் ஆசிரியரை அடித்துக்கொன்ற எகிப்தியர்களுக்கு சிறை…!!