By 16 May 2016 0 Comments

சீமான்; தமிழகத்தின் முதல் அமைச்சராம்? -அவதானி…!!

timthumbதமிழகத்தில் எலக்சன் வருகுது அல்லோ அங்க வெல்லப் போவது அம்மா ஆட்சியா? ஐயா ஆட்சியா? எண்டு கருத்துக்கணிப்பு இருக்கேக்க.. வெளிநாட்டில இருக்கிற எங்கட போராட்டத்திற்கு எண்டு உண்டியல் குலுக்கி காசுசேர்த்த பயலுகள் இப்ப சீமானின்ட எலக்சனுக்கு ஸ்பெசலாக கலக்சன் செய்யினம்.

என்ன சொல்லுகினம் எண்டு கேட்டால் இந்த தமிழகக்கட்சிகள் தனித்தனிய எலக்சனில நிற்கினம் அல்லோ அப்ப வாக்குகள் பிரிஞ்சு போகுமாம் அதால அண்ணன் சீமான்தான் வெற்றி பெற்று அடுத்த முதல்அமைச்சர் ஆவாராம். அல்லாட்டிக்கு ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக அதுதான் கிங்மேக்கராக சீமானின் கட்சி இருக்கப் போகுதாம்.

இவையளை சரியான லூசுப்பயலுகள் எண்டு நினைச்சுப் போடாதையுங்கோ.. சரியான விசயகாரர்கள், காரியக்கட்டைகள். யமனுக்கே இடியப்பம் தீத்தினவையள். சொல்லுறன் கவனமானக் கேளுங்கள்

எங்கட இறுதிப் போராட்டத்திற்கு எண்டு புலம்பெயர் எங்கட சனத்திட்ட பண்பாகவும் பலாத்காரமாகவும் போராட்டத்திற்கு எண்டு பணத்தை கறந்தவையள் பாருங்கோ. தமிழ்ஈழம் கிடைச்ச உடனேயே வட்டியோட திருப்பித் தருவம் எண்டு உணர்ச்சி தழும்ப சொல்லி காசைக்கறந்து போட்டினம் கண்டியளோ!

ஆனால் என்னசெய்வது தமிழ்ஈழம் பாங்ரப்சியிலை போயிட்டுது அதுதான் பாருங்கோ திவாலாகிப் போச்சுது. காசுகுடுத்த சனம் காசைத் திருப்பிக்கேட்க இவையள் என்ன சொல்லுகினம் எண்டா கொஞ்சம் பொறுங்கோ சீமான் உரியநேரத்திலை எல்லாம் செய்வார், அவருக்குத்தான் காசு அனுப்புறம் எண்டு காலத்தை கடத்துகினம்.

காசை வாங்குகின்ற சீமானும் எதாவது இவையளுக்கு விலாசமாக சொல்லியும் செய்தும் காட்டவேணும் அல்லோ.. அதுக்குத்தான் இந்த எலக்சனிலை தனியாக குதிச்சிருக்கிறார்.

அல்லாட்டிக்கு 60 வருசமாய் மாறி மாறி ஆட்சி செய்கிற அம்மா கட்சியையும் ஜயா கட்சியையும் ஊழல்கட்சி எண்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எண்டு சொல்லுகிறவர் மூன்றாவது பலம் உள்ள கட்சியில் சேர்ந்து கொள்வது தான் உண்மையான மாற்றத்திற்கு அவசியம் பாருங்கோ. இப்ப விளங்குதா?

தமிழ்ஈழம் பாங்ரப்சியிலை போன உடனேயே அந்த இடைவெளியை தனக்கு சாதகமாக்கிப் போட்டார். புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் படத்தையும், அதன் சின்னமான புலிக்கொடியையும் வைச்சு படம் காட்டி அதன்மூலம் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் பணம் கறக்கிறார்.

அதுமட்டுமில்லை ஈழத்தமிழர்களுக்காக குரல்குடுத்த நெடுமாறன் வை.கோ திருமா போன்றவர்களை ஓரு மூலைக்குள்ள கொண்டுபோய் ஓதுக்கிப் போட்டார் பார்த்தியளா?

அண்மையில் தந்தை பெரியாரை, சீமான் இழிவாகப் பேசியதால் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தந்தை பெரியார் திராவிடக் கட்சியினர் “சீமான் மன்னிப்புக் கேட்வேண்டும் இன்றேல் போராட்டம் தொடரும்” என்றும், “2001ஆண்டில் தங்களுடன் இணைந்த சீமான் ஓரு டிரங்கு பெட்டியும் நாலு பேண்ட் சட்டையும் வைத்திருந்த சீமானுக்கு இப்போது 80 இலட்சம் பெறுமதியான கார் எப்படி வந்தது? எண்டும் சீமானுக்கு ஊழலைப் பற்றி கதைக்க அருகதை இல்லை” எண்டும் வறுத்து எடுத்திருக்கினம்.

தந்தை பெரியார் திராவிடக்கட்சியினரும் சீமானிடம் ஏமாந்து விட்டார்கள் உங்கள் கட்சியில் இருந்திருந்தால் 80 இலட்சம் பெறுமதியான கார் வாங்கியிருக்க முடியுமா?

தமிழகமே தலைவணங்கும் தந்தை பெரியார் தான் தன் தலைவன் என்றார் சைமன் செபஸ்டியன் என்கின்ற சீமான்.

பின்னர் கிறிஸ்தவ மதத்தையும் மறைத்து தனது பெயரை சுத்த தமிழ்பெயராக சீமான் என்று மாத்தினார். பிரபாகரன்தான் தன் தலைவன் என்றார். கட்சிமாறிய இந்தப்பட்சி இப்ப பெரியார் யார் எண்டு அல்லோ கேட்குது.

இன்னுமொரு விசயம் பாருங்கோ வருகிற எலக்சனிலை தான் போட்டி போடுகிற தொகுதியிலேயே தோற்கப் போகின்றார். தான்விழுந்தாலும் தன்ட பிசினஸ் விழாமல் இருக்க சீமான்; தனது கட்சிக்கு விழுகிற வாக்குகளை கணக்கு காட்டப் போகின்றார். அதால கலக்சன் உயரும். சீமானுக்கு வாக்குகள் உயர அவரின்ட வங்கிக்கணக்கு உயரும்.

சிங்கம் சிங்கிளாக குதிச்சு இத்தனை வீதம் எடுத்தேன் எண்டு சொல்ல அதைக்கேட்டு எங்களின்ர கலக்சன்காரர் துள்ளிக்குதிச்சு அதுக்கும் வரைபிலக்கணம் குடுக்கப் போகினம.;

பிரதமராக வாற வாய்ப்பு இருக்குது எண்டு அடுத்த எலக்சனிலை பிரச்சாரம் செய்தாலும் செய்வினம் அல்லாட்டிக்கு டில்லியில் ஆட்சி அமைக்க கிங்மேக்கராக இருக்கப் போகிறார் எண்டு கதைவிட்டாலும் விடுவினம்…

ஏன் எண்டால் பணத்துக்காக கற்பனைகளை விற்பனை செய்து எழுதிற எங்கட ஊடகங்கள் ஊதிப்பெரிப்பிக்க இருக்கினம்.Post a Comment

Protected by WP Anti Spam