உடற்பயிற்சியின் மூலம் 13 வகை புற்றுநோயை தடுக்கலாம்…!!

Read Time:2 Minute, 24 Second

201605171456135369_Exercise-May-Reduce-the-Risk-of-13-Cancers_SECVPFவேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோயை தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோயை தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பலவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய இந்த ஆராய்ச்சியில் வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். அனைத்தையும் மீறியவகையில் அதீதமான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அனைத்துவகையான புற்றுநோயில் இருந்தும் ஏழு சதவீதம் அளவிலான பாதுகாப்பை பெற முடியும்.

கடினமான தொடர் பயிற்சி மூலம் மட்டுமல்லாது, ஓய்வுநேரங்களில் செய்யும் சிலவகை உடற்பயிற்சியின் மூலமும் புற்றுநோயில் இருந்து சற்றே விலகி இருக்கலாம் என்பதும் சமீபத்தில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை…!!
Next post ராஜஸ்தானில் மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!