கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்: திக் திக் வீடியோ…!!

Read Time:1 Minute, 40 Second

201605181917312057_A-narrow-escape-Women-survive-after-headon-collision_SECVPF (1)அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் 2 இளம்பெண்கள் வந்து கொண்டிருந்தனர். குறுக்கு சாலையில் இருந்து திடீரென பிரதான சாலையில் ஏறிய அவர்கள், அந்த சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில், அந்த 2 பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். கார் இடித்த வேகத்தில் அவர்களின் இருசக்கர வாகனம் சுமார் 20 அடி தூரத்தில் போய் விழுந்தது. மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது.

சாலையில் விழுந்த பெண்கள் இறந்துவிட்டதாக நினைத்து அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் அருகில் சென்றனர். ஆனால், அந்த பெண்களில் ஒருவர் தானாகவே எழுந்து நின்றார். மற்றொரு பெண்ணுக்கும் பெரிய அளவில் அடிபடவில்லை. உடனே அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்..!!
Next post ரூ. 2075 கோடிக்கு ஏலம்போன அபூர்வ வைரம்…!!