By 18 May 2016 0 Comments

“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்..!!

timthumbவெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்..

இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மwhite vanத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக அவர்கள் வெறுமே சிவில் உடைகளில் வரும் அதிகாரிகளால் கடத்தப்பட்டு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்த செயல்முறை ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நிலவிய வெள்ளைவான் கலாச்சாரம் ஜனாதிபதி சிறிசேனவின் யகபாலனய ஆட்சியிலும் மீண்டும் ஆரம்பமாகி விட்டதோ என்கிற ஒரு அச்சத்தை மீண்டும் புதுப்பிக்கிறது.

குழப்பம் உண்டாக்கும் மற்றொரு காரணி புனர்வாழ்வு வழங்கப்பட்ட அநேக முன்னாள் பலி உறுப்பினர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது குறிப்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு புலி தலைவர்களின் விடயத்திலும் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் தமிழ் ஊடகவியலாளர்களிடம் கைது செய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்.

புனர்வாழ்வு பெற்றதின் பின்னர் அவர்கள் சுதந்திரமான மனிதர்களாகத் தான் விடுதலை செய்யப் பட்டார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் திரும்பவும் இப்போது கைது செய்யப்படுகிறார்கள்? இந்த கேள்வி அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த விடயம் தொடர்பாக குடும்ப அங்கத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை புரிந்து கொள்ளும் அதேவேளை, ஒரு முக்கியமான உண்மையையும் தெளிவு படுத்த வேண்டி உள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவது அவர்களின் கடந்தகால செயற்பாடுகளுக்கு ஒரு தெளிவான நற்சான்றிதழை வழங்குகிறது.

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலிகள் அவர்களது பழைய செயற்பாடுகளுக்கோ, அவன் அல்லது அவள் எல்.ரீ.ரீ.ஈயில் தீவிரமாகச் செயற்பட்ட காலத்தில் மேற்கொண்ட குற்றங் குறைகளுக்காகவோ நிச்சயமாக தண்டிக்கப்படப் போவதில்லை.

எனினும் விடுதலை செய்யப்பட்டதின் பின் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் எந்தவிதமான புதிய சட்டவிரோத செயற்பாடுகள் அல்லது குற்றங்களுக்காக அவர் விசாரணை செய்யப்படுவதற்கு, கைது செய்யப் படுவதற்கு அல்லது தண்டிக்கப்படுவதற்கு எதிராக புனர்வாழ்வு எந்தவித தண்டனை விலக்கையம் வழங்காது.

ஒரு நபர் வன்முறையில் ஈடுபடுவதற்கு அல்லது எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையில் பங்கெடுத்தாலும் அந்த நபர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஒரு விசாரணையின் விளைவாக கைது செய்யப்பட்ட அந்த நபர் நிரபராதி எனக் கண்டறியப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார்.

புனர்வாழ்வு கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கையோ அல்லது மொத்த தண்டனை விலக்கையோ வழங்காது.

நான்கு கிழக்கு பிராந்திய முன்னாள் புலித் தலைவர்களின் கைது காரணமாக எற்பட்டுள்ள மற்றொரு விளைவு, உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தவர்களிலுள்ள புலிகள் வட்டாரத்தின் மத்தியில் அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கான காரணம் ராம், நகுலன் மற்றும் ஏனையோர் போர் முடிவடைந்ததின் பின்னர் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கியதுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

வெளிநாட்டு புலிகள் இடையே உள்ள அநேக உயர்மட்ட செயற்பாட்டாளர்கள், ஸ்ரீலங்கா புலனாய்வாளர்கள் நடத்திய எதிர் – புலனாய்வு நாடகத்தினால் பெரிதும் ஏமாற்றப்பட்டார்கள், அதில் ராம், நகுலன் மற்றும் ஏனையவாகள் முக்கிய பாத்திரங்களை வகித்தார்கள்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு புலிகள் இதை வெளிப்படுத்தவில்லை, ஏனென்றால் எல்.ரீ.ரீ.ஈ இன்னும் போராடுகிறது என்று கிழக்கில் விடுக்கப்பட்ட பம்மாத்தை அவர்கள் முழுமையாக நம்பியதற்காக அவர்கள் வெட்கம் அடைந்திருந்தார்கள்.

இதற்காக அவர்கள் ராம் குழுவினர் மீது தீவிர சினம் கொண்டிருந்தார்கள். இப்போது வெளிநாட்டு புலி அணியினரிடையே ஒரு மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்த அதே முன்னாள் புலிகள் இப்போது ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்! வெளிநாட்டுப் புலிகள் ‘புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள்’ இப்போது பிரச்சினையில் மாட்டியுள்ளார்கள் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள்.

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள் கூட கைது செய்யப்படும் தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கத்தில் உள்ள பல்வேறு சட்ட அமலாக்கல் மற்றும் புலனாய்வு உறுப்புகள் மத்தியில் ஒத்துழைப்பு மற்றும் வளங்களை தொகுத்தளிப்பதில் குறைபாடு உள்ளதோ என ஒரு தோற்றப்பாடு தோன்றுகிறது.

தெய்வீகன் – கோபி – அப்பன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈக்கு மறுமலர்ச்சி வழங்கும் முயற்சி 2014 ஆரம்பத்தில் இடம்பெற்றது அந்த சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் படைகளை ஒன்றிணைத்து ஒற்றுமையாக ஒரே குழுவாக இயங்கியது.

எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சியை நசுக்குவதற்காக காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு முகவர்கள் ஒன்றாக ஒத்தழைத்து ஒரு பன்முக ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டார்கள். துரதிருஷ்டவசமாக அந்த ஐக்கியத்திற்கான உறுதி மற்றும் நல்லியல்புகளை இந்த காலகட்டத்தில் காண முடியவில்லை.

பிரகீத் எக்னாலிகொட காணாமற்போன விடயத்தில் உயர்மட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதன் விளைவாக இந்த அரசாங்க முகவர்களிடையேயான உறவுகளில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கலாம்.

சில முக்கிய செயற்பாட்டாளர்கள் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான எதிர்த்தரப்புக்கு தகவல்களை வழங்குகிறார்கள் என்கிற அச்சம் நிலமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

மிகவும் முக்கியமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை போன்ற யாரும் இப்போது பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டு தலைமை நிலையில் இல்லை. அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரைப்பற்றி என்னதான் சொன்னாலும் தேசிய பாதுகாப்புக்கு சவால்கள் ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நிறுவனத்தின் அனைத்து கிளைகளம் ஒருமித்து திறமையாகச் செயற்படுத்துவதை கோட்டா செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதன்படி அதிகாரத்தில் உள்ள எவரும் இந்த கைதுகளின் பின்னாலுள்ள உண்மையான காரணத்தையோ அல்லது சாத்தியமான எல்.ரீ.ரீ.ஈயின் மீள்வரவு பற்றிய அச்சுறுத்தலின் தீவிரம் பற்றிய விபரங்களையோ தெளிவாக விளக்கவில்லை.

ரி.ஐ.டி இதற்கான முழுப்பொறுப்பையும் எடுத்துள்ளதாகத் தெரிவதால் காவல் துறைதான் இந்த விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் ஆனால் இப்போது காவல்துறையின் ஊடகப் பிரிவு இடைநிறுத்தப் பட்டுள்ளதுடன் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு என்று சொல்லப்படுவதை உறுதிப்படுத்தியோ அல்லது மறுத்தோ உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை தற்போதைய பாதுகாப்புச் செயலாளரினால் தெளிவற்ற உறுதிப்பாடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது பயனுள்ளதாகவோ அல்லது வரையறுக்கப்பட்டதாகவோ இல்லை.

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுகிறது என்று சொல்லப்படுவதால் பாரிய ஆபத்து உள்ளது என்று ஊரெங்கும் சொல்லி வருகிறார்.

கருமேகங்களிடையே வெள்ளி மின்னல்

இந்த நிச்சயமற்ற குழப்பமான இருண்ட மேகங்களிடையே ஒரு வெள்ளி மின்னல் போன்ற நம்பிக்கையை – ஒருவர் அதை அப்படி அழைக்கலாம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் விளக்கமான அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் மே 3, செவ்வாயன்று கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் விக்ரமசிங்கா, எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகள் பற்றி காவல்துறை மற்றும் இராணுவ புலனாய்வு பணியகம் (டி.எம்.ஐ) ஆகியவற்றிடம் தான் விளக்கம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பத்திரிகை அறிக்கைகள் மேலும் தெரிவித்திருப்பது, காவல்துறை மற்றும் டி.எம்.ஐ ஆகிய இருதரப்பினரிடமிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப் பட்டிருப்பதாகவும் மற்றும் அதனால் நிச்சயமாக அந்தக் குழு ஒரு மறுவரவை மேடையேற்றுவதற்கான சாத்தியங்கள் கிடையாது என்கிற உத்தரவாதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பெற்றிருக்கிறார் என்று.

பிரதமர் பத்திரிகை அறிக்கைகளை சரியாக மேற்கோள் காட்டினாரா என்பது யாருக்கும் தெரியாது ஆனால் உண்மையில் அவர் சரியாக மேற்கோள் காட்டியுள்ளார் என்று கருதிக் கொண்டு இரண்டு விடயங்களை இங்கு விளக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலாவது உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக ஸ்ரீலங்காவில் துடைத்தழிக்கப் பட்டுள்ளது, ஆனால் அதன் எச்சம் என்று ஏளனமாகக் குறிப்பிடப்படும் வெளிநாட்டு புலிகளின் கிளைகள் இன்னமும் அழிக்கப் படவில்லை.

இரண்டாவதாக வெளிநாட்டு புலிகள், எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்கும் ஒரு முயற்சியாக வன்முறைகளை தூண்டிவிடும் திறன் பெற்றவை. இதில் முக்கியமானது புத்துயிர்ப்பு மற்றும் புத்துயிர்ப்பு முயற்சி ஆகிய இரண்டையும் தெளிவாக வேறுபடுத்தி அறிவதுதான்.

ஒரு முழு அளவிலான எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு மற்றும் புலிகள் ஒரு வல்லமை மிக்க சக்தி என்கிற பழைய நிலைக்குத் திரும்புவது தற்போதைய நிலையில் ஏறக்குறைய அசாத்தியமானது.

எனினும் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர்ப்பு வழங்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று நிரூபணமானாலும் அவ்வாறான முயற்சிகள் மேலும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகளின் உறுப்புகள் அத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கினால் அத்தகைய ஆபத்துகள் எப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆகவே தொடர்ச்சியான கண்காணிப்புக்கான அவசியம் உள்ளது. இந்த மாதிரியான விடயங்களில் மெத்தனம் காட்டுவதற்கான இடைவெளி மிகவும் சிறியதாகவே இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam